யாரை குறிவைக்கிறார் சீமான்? - அதிர வைக்கும் 6 வியூகங்கள்


தேர்தல் அரசியலில் பலத்தை நிரூபிக்காதவரையில், புதிய கட்சியின் மீதான எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும் என்பது பழைய வரலாறு. அப்படிதான் சீமானின் நாம் தமிழர் கட்சியும் பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் அவ்வப்போது புதிய கட்சிகள் தோன்றினாலும், அவைகள் பழைய கட்சிகளை சற்று பலவீனப்படுத்தியே வந்துள்ளன.

 1957-ம் ஆண்டு அண்ணாதுரை தி.மு.கவைத் தொடங்கியபோது, கம்யூனிஸ்ட்டுகள் பலவீனப்பட்டார்கள். 96-ம் ஆண்டு ம.தி.மு.க உதயமானபோது, தி.மு.கவுக்கு மாற்று என முன்வைக்கப்பட்டது. 89-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பா.ம.க மாற்று சக்தியாக முன்வைக்கப்பட்டது. கால ஓட்டத்தில் அதுவும் கரைந்துபோனது. 2006-ம் ஆண்டு தே.மு.தி.க கால் பதித்தபோது, பா.ம.கவும், ம.தி.மு.கவும் பலவீனப்பட்டது. 

அதுவே, பாக்யராஜ், டி.ராஜேந்தர் போன்றோர் தொடங்கிய கட்சிகளை மக்கள் ஆராதிக்கவில்லை. 234 தொகுதிகளிலும் மாற்றை முன்னிறுத்தும் கட்சிகளுக்கு மக்கள் வரவேற்பைக் கொடுத்தே வந்துள்ளனர். அந்த வகையில், 'தமிழனா... திராவிடனா?' என்ற கோஷத்தோடு களமிறங்கும் சீமானும் கவனிக்கப்படுகிறாரா? என்ற கேள்விக்கு மே 19 பதில் தரும். புதிய மாற்று என தே.மு.தி.க வந்தபோது பா.ம.க, ம.தி.மு.கவை பலவீனப்படுத்த வேண்டும் என விஜயகாந்த் எண்ணவில்லை. 

அரசியல் ஓட்டத்தில் அனைத்தும் இயல்பாகவே நடந்தன. அண்ணா கால்பதித்தபோது கம்யூனிஸ்ட்டுகள் பலவீனமடைவார்கள் என அவர் நினைத்துப் பார்க்கவில்லை. அந்த வகையில், 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க என பிரதான கட்சிகளுக்கு எதிராக சீமான் முன்வைக்கும் அரசியல் ஆச்சர்யத்தை அளிக்கிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv