மதுர குலுங்க குலுங்க பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!-Photos


மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. எதிர்சேவைகளுக்குப் பிறகு, காலை 6 மணி அள‌வில்‌ வைகை ஆற்றிற்கு வருகை‌ புரிந்த கள்ளழகர், பச்சைப் பட்டுடுத்தி‌ ஆற்றில் இறங்கினார்.

 இதை‌ காண‌ லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். மதுரை மாநகரில்நடைபெறும் விழாக்களில் சித்திரைத் திருவிழா வரலாற்றுச் சிறப்புமிக்கது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து இந்த விழா நடத்தப்படுகிறது. சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. 

 இந்த ஆண்டு சிறப்புமிக்க சித்திரைத்திருவிழா கடந்த 10–ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த 7–ம் தேதி விழா ஆரம்பமானது. மீனாட்சி அம்மன் கோவிலில் 17–ம் தேதி பட்டாபிஷேகமும், 18–ம் தேதி திக்குவிஜயமும் நடந்தன. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்–சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த செவ்வாய்க்கிழமையும், மறுநாள் புதன்கிழமை காலையில் தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்றது.

 இந்த நிகழ்ச்சிகளை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர். இதை தொடர்ந்து, அழகர்மலையில் இருந்து சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் (20–ம் தேதி) மாலை 7.45 மணியளவில் மதுரைக்கு புறப்பட்டார். கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி, கள்ளழகர் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக நேற்று காலை 7 மணி அளவில் மதுரையை அடுத்த மூன்றுமாவடிக்கு வந்தார்..

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv