பெண்கள் மட்டுமே வணிகர்களாக கொண்ட 500 ஆண்டுகள் பழமையான சந்தை!


இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் அமைந்துள்ள பழமையான சந்தை ஒன்று தான் பெண்கள் மட்டுமே வணிகர்களாக கொண்டு செயல்பட்டு வருகின்றது.

மணிப்பூரில் Ima Keithel என அறியப்படும் இந்த சந்தையானது 4000 பெண் வணிகர்களால் நிர்வகிக்கப்படுகிறது. 500 ஆண்டுகள் பழமையான இந்த சந்தையில் மக்களுக்கு தேவையான அனைத்துவகை பொருட்களும் ஒருங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Ima Keithel என்றாலே தாயாரின் சந்தை என்பது பொருள். பெண்கள் மட்டுமே வணிகர்களாக கொண்ட இந்த சந்தையானது ஆசியாவிலேயே பாரிய சந்தை என கூறப்படுகிறது. உலகிலேயே மிகபெரும் சந்தை இதுவாக கூட இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இருப்பினும் இதன் தோற்றம் குறித்து பல்வேறு மாறுபட்ட கருத்துகள் உள்ளன. 16 ஆம் நூற்றாண்டில் துவங்கப்பட்டதாக ஒரு சிலர் கூறுகின்றனர்.

மேலும் சிலர், நாட்டை காக்க ஆண்கள் அனைவரும் அணித்திரள வேண்டும் என அப்போதைய அரசர் அழைப்பு விடுத்ததால்,

வணிகம் விவசாயம் உள்ளிட்டவைகளை பெண்களே முன்னெடுத்து நிர்வகிக்கும் நிலை ஏற்பட்ட Lallup காலகட்டத்தில் இந்த சந்தை துவங்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.

இந்த சந்தையின் சிறப்பு என்னவெனில் இங்கு வணிகம் செய்ய திருமணம் செய்துகொண்ட பெண்களை மட்டுமே அனுமதிக்கின்றனர்.

விவசாய குடும்பத்தின் எஞ்சிய உறுப்பினர்கள் பரம்பரை பரம்பரையாக இதையே கடைபிடித்து வருகின்றனர் என்பதும் இதன் சிறப்பு.

ஆணாதிக்கம் சமையங்களில் அச்சுறுத்தலை அளித்தாலும் அதையும் துணிவுடன் கடந்து வந்து இதுநாள் வரை இந்த சந்தை துடிப்புடன் செயல்பட்டு வருகின்றது.

கடந்த ஜனவரியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்த சத்தைப் பகுதியையும் பாதித்துள்ளது. அதில் இங்கிருந்த 9 பேர் கொல்லப்பட்டனர். மட்டுமின்றி சந்தையின் சிலபகுதிகள் இடிந்து தரைமட்டமானது.

இப்பகுதிக்கு சுற்றுலா வருவோரை பாரம்பரிய கைவினைப் பொருட்களையும் நவநாகரிக ஆடைகளையும் உள்ளூர் பொருட்களையும் அளித்து இங்குள்ள வணிகர்கள் வரவேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv