மாநிலங்களவையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக சுப்ரமணியன் சுவாமிக்கு கண்டனம்


பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மாநிலங்களவையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக துணைத் தலைவர் குரியன் கடும் கண்டனம் தெரிவித்தார். நாடாளுமன்ற மாநிலங்களவை இன்று காலை தொடங்கியதும் முன்னாள் மக்களவை உறுப்பினர் சித்து பதவியேற்றுக் கொண்டார். 

இதனை தொடர்ந்து சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த உறுப்பினர் முனாவர் சலீம், அலிகர் பல்கலைகழகம் தொடர்பான சுப்பிரமணியன் சுவாமியின் நடவடிக்கை குறித்து பேசினார். இதற்கு பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இந்திய அரசியலமைப்பு குறித்து எதுவும் தெரியாது என்றும் வேறு நாட்டு அரசியலமைப்பு சட்டங்களை தான் அவர்கள் தெரிந்து வைத்துள்ளனர் என்றும் கூறினர். 

இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்கும் படியும் குரியன் உத்தரவிட்டார். மேலும் தேவையின்றி ஆத்திரமூட்டும் வகையில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுப்பிரமணியன் சுவாமிக்கு குரியன் எச்சரித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv