கமலுக்கு பதிலடி கொடுத்த தேர்தல் ஆணையம்-Photos


நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் சபாஷ் நாயுடு பட தொடக்கவிழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன் வரும் சட்டமன்ற தேர்தலில் தான் வாக்கு செலுத்துவது சந்தேகம் என்று தெரிவித்திருந்தார். மேலும் தனது ஓட்டை கடந்த தேர்தலில் வேறு யாரோ போட்டுவிட்டார்கள் என்றும் தெரிவித்திருந்தார். 

 கமலின் இந்த பேச்சுக்கு, தமிழக தலைமை தேர்தல் ஆணையம் அவருக்கு பதில் தரும் விதமாக கமல் மற்றும் கொளவுதமியின் புகைப்படம் ஒட்டப்பட்ட வரிசை பட்டியலை 3மணி நேரத்தில் வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளது. மேலும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக கமல்ஹாசன் ஓட்டு போட்டு ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

 கமலுக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் தமிழக ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கமலுக்கு ஆதரவாக இருத்ததை குறிப்பிட்டுள்ள சமூக வலைதள வாசிகள், தற்போது ஒட்டு போட மாட்டேன் என்ற விதத்தில் பொறுப்பில்லாமல் பேசியிருப்பதாக கமல் மீது சமூக வலைதள் வாசிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv