உலக பூமி தினம் இன்று.!


சுற்றுச் சூழல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, பூமியை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதியாகிய இன்று உலக பூமி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 


 கடந்த 1970 ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் 192 நாடுகளில் கொண்டாடப்படுவது இதன் சிறப்பு அம்சம். இந்த ஆண்டு ‘அற்புதமான தண்ணீர் உலகம்’ என்ற நோக்கத்தில் கொண்டாடப்படுகிறது. 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பது இதன் பிரதான நோக்கம் ஆகும்.

 உலகில் 900 கோடி மனிதருக்கும், கணக்கிட முடியாது ஜீவராசிகளுக்கும் உணவு, உறைவிடத்தை அளித்து பேணிக் காத்து பூமி வருகிறது. சூரிய குடும்பத்தில் மொத்தம் 8 கோள்கள் உள்ளன. இவற்றில் எந்த கோளுக்கும் இல்லாத உயிர்கள் வாழக்கூடிய தனி சிறப்பு பூமிக்கு மட்டுமே உண்டு.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv