சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உடல் சூட்டை எப்படி தணிப்பது?..


சச்சின், கோலிக்கு அடுத்து இந்தியாவில் ஒரே வருடத்தில் அதிக சதம் அடித்தது இந்த வருடத்தின் கோடை வெயில் தான். சென்னை மட்டுமின்றி, கோவை, வேலூர், மதுரை என தமிழகத்தின் பல ப
குதிகளில் வெயில் மக்களுக்கு "கும்பிபாகம்" தண்டனை வழங்கி வருகிறது.

இந்த வருடத்தின் அதீத வெயில் தாக்கத்தால் வீட்டின் மொட்டை மாடியில் ஆம்லேட் போடும் அளவிற்கு அனல் பறக்கிறது. இதனால் உடல் சூடு அதிகரிக்கிறது, உடலில் நீர்வறட்சி உண்டாகிறது. எனவே, சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உடல் சூட்டை தணிக்க வேண்டியது தலையாய கடமையாகிவிட்டது.

இல்லையேல், மயக்கம், நீர் வறட்சியின் காரணமாக உண்டாகும் உடல் உறுப்புகளின் செயற்திறன் குறைபாடுகள் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்...

உடற்பயிற்சி

அதிகப்படியான அளவு உடற்பயிற்சி செய்ய வேண்டாம். இது உடலில் நீர்வறட்சி உண்டாக்க கூடும். முடிந்த வரை விளையாட்டின் மூலம் பயிற்சி செய்யுங்கள். இதனால், உடலில் வியர்வை நன்கு சுரந்து உடலை சுறுசுறுப்பாக உணர உதவும்.

நீராகாரம்

கடினமான உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், துரித உணவுகள், பிட்சா, பர்கர் போன்ற உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளை தவிர்த்து. நீராகாரம் நிறைய உட்கொள்ளுங்கள். பழைய சோறு, இளநீர், பதநீர் போன்ற இயற்கை பானங்களை குடியுங்கள்.

கூல் ட்ரிங்க்ஸ்

வெப்பம் அதிகமாக இருக்கிறது, தாகமாக இருக்கிறது என கூல் ட்ரிங்க்ஸ் பருக வேண்டாம். உண்மையில் கூல் ட்ரிங்க்ஸ் குடிப்பதால் உடல் வெப்பம் அதிகரிக்க தான் செய்யும். எனவே, இயற்கை பானங்கள், பழங்களை தேர்வு செய்து உண்ணுங்கள்.

பானை நீர்

ஃப்ரிட்ஜில் வைத்து தண்ணீர் குடிப்பதை தவிர்த்து, பானையில் நீர் சேமித்து குடித்து வாருங்கள். இது உடலுக்கு நல்லது, உடல் சூட்டை தணிக்கும். மேல் கூறியவாறு கூலான நீர், பானங்கள் குடிப்பதால் உண்டாகும் உடல் சூடு அதிகரிக்காமல் பாதுகாக்கும்.

காட்டன் உடைகள்

சுட்டெரிக்கும் வெயிலில் ஃபேஷன் என்ற பெயரில் ஜீன்ஸ், பாலியஸ்டர் போன்ற துணிகளால் தயாரிக்கப்பட்ட உடைகளை அணிய வேண்டாம். காட்டன் உடைகளை தேர்வு செய்யுங்கள்.

மெத்தை

மெத்தை பயன்படுத்துவதை தவிர்த்து, வெறும் தரை அல்லது லேசான போர்வை விரித்து உறங்குங்கள். இதனால், இரவு அதிகப்படியாக உடல் வெப்பம் அதிகரிக்காமல் இருக்கவும், நல்ல உறக்கம் பெறவும் முடியும்.

கயிற்றுக்கட்டில்

கட்டிலில் படுத்தால் உறக்கம் வரும் என்பவர்கள் கயிற்றுக்கட்டில் பயன்படுத்தலாம். இது, உடலுக்கும் இலகுவாக இருக்கும், உடல் சூட்டையும் அதிகரிக்காமல் பாதுகாக்கும்.

காலை, மாலை

காலை மட்டுமின்றி, மாலை வேலை முடிந்து வீடு திரும்பியதும் இன்னொரு முறை குளியுங்கள். இதனால், வேர்வை காரணமாக உண்டாகும் நச்சு தொற்று, உடல் சூட்டை போக்க முடியும். மற்றும் சுறுசுறுப்பாக உணர்வீர்கள்.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv