கிறிஸ்மஸ் விழாவின் காத்திரமான செய்திகள்....


கிறிஸ்மஸ் விழாவின் காத்திரமான செய்திகள்
          - அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் -


  கிறிஸ்மஸ் விழா என்பது இறைவன் மனிதனான நிகழ்வு ஆகும். இது வரலாறு பதிவு செய்துள்ள மாபெரும் நிகழ்வாகும். அதனால்தான் உலக வரலாறே ‘கிறிஸ்துவுக்கு முன்’ (கி.மு)ää ‘கிறிஸ்துவுக்குப் பின்’ (கி.பி.) எனப் பிரிக்கப்படுகின்ற அளவுக்கு வரலாற்றில் இந்நிகழ்வு முக்கியமான ஒன்றாகிவிட்டது. வரலாற்றையே வகுத்த நிகழ்வாக கிறிஸ்துவின் பிறப்பு அமைகின்றது.
  கவிஞர் கண்ணதாசன் ‘இறவாக் காவியம்’ என்று குறிப்பிடும் தான் எழுதிய ‘இயேசு காவியம்’ என்ற நூலை நிறைவுசெய்யும்போது இவ்வாறு பாடுகின்றார்
“தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது யூதநிலத்தினிலே
சத்திய வேதம் நின்று நிலைத்தது தாரணி மீதினிலே
எத்தனை உண்மைகள் வந்து பிறந்தது இயேசு பிறந்ததிலே
இத்தனை நாளும் மானிடன் வாழ்வது இயேசுவின் வார்த்தையிலே”

  ஆம்ää இயேசுவின் பிறப்பிலே எத்தனையோ உண்மைகள் வந்து பிறந்தன! கிறிஸ்மஸ் விழா இன்று நமக்குத் தரும் ஆழமானää அர்த்தம் நிறைந்த அந்த உண்மைகளைää காத்திரமான செய்திகளைச் சுருக்கமாக விபரிப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

கிறிஸ்மஸ் என்பது அன்பின் விழா

  கிறிஸ்மஸ் விழா என்பது அடிப்படையில் அன்பின் விழா@ கடவுளுடைய அன்புக்கு எடுக்கப்படும் விழா. கடவுள் எந்த அளவுக்கு இந்த உலகத்தை அன்புசெய்தார் என்ற கேள்வியை எழுப்பினால்ää “தம் ஒரே மகன்மீது நம்பிக்கைகொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டுää அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மீது அன்புகூர்ந்தார்” (யோவான் 3: 26) என்பதே விடையாகும்.
   “நாம் வாழ்வு பெறும்பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது” (1 யோவான் 4:9) என யோவான் நற்செய்தியாளர் எழுதுகிறார். “கடவுள் நம்மீது கொண்ட பேரன்பின் வெளிப்பாடே கிறிஸ்துவின் மனுவுடலேற்பு” என புனித அகுஸ்தீனார் கூறுகின்றார்.
  முற்காலத்தில் பல்வேறு இறைவாக்கினர்கள்ää நீதித் தலைவர்கள் எனப் பலர் வழியாகப் பேசிய கடவுள்ää “காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறுää கடவுள் தம் மகனை பெண்ணிடம் பிறந்தவராகவும்ää திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்” (கலாத்தியர் 4:4). இங்கே கடவுளின் அன்பு இயேசுவில் அதிஉன்னதமான முறையில் வெளிப்படுவதை புனித பவுல் எடுத்துக்காட்டுகின்றார்.
  இவ்வாறு கடவுளின் ஒரே அன்பு மைந்தர் இயேசுவின் பிறப்பு ஏற்ற காலத்தில் கனிந்திடும் இறை அன்பாக வெளிப்படுவதைக் காண்கிறோம். அன்பு வற்றிப்போன இன்றைய மானிட மனங்களில்ää இறைவனுடைய அன்பை நினைவுபடுத்தும் விழாவாகää அந்த அன்பை அறிந்துää அனுபவிக்கும் விழாவாக இந்தக் கிறிஸ்மஸ் விழா அமைகின்றது.


கிறிஸ்மஸ் என்பது அமைதியின் சமாதானத்தின் விழா
  கிறிஸ்மஸ் காலத்தில் கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்திகள் பரிமாறப்படுகின்றன. இந்த உலகத்திலே பரிமாறப்பட்ட முதல் கிறிஸ்மஸ் செய்திää “உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக” (லூக்கா 2:13ää13) என்பதாகும். இது கிறிஸ்துவினுடைய பிறப்பின்போது வானதூதர்கள் பாடிய மகிழ்ச்சிக் கீதம்.

  வெளியில் யுத்தம் ஏற்படுவதற்கு முன்னர் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் யுத்தம் ஏற்படுகின்றது. மனித உள்ளத்தில் ஏற்படும் யுத்தத்தின் பிரதிபலிப்பே சமுதாயத்தில்ää நாட்டில்ää உலகத்தில் யுத்தமாக உருவெடுக்கின்றது. எனவே முதலில் ஒவ்வொரு மனித உள்ளமும் அமைதியைää சமாதானத்தை அனுபவிக்க வேண்டும்;.
  அமைதி சமாதானம் இழந்து வாடும் இன்றைய மனுக்குலத்திற்கு இயேசு கொண்டுவந்த சமாதானம் இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாக இருக்கின்றது.
கிறிஸ்மஸ் என்பது மீட்பின்ää இரட்சிப்பின் விழா
  “அவர் ஓர் மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” (மத்தேயு 1: 21) என இயேசுவின் முக்கிய பணி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர் அவதரித்தது “துஷ்டநிக்கிரக சிஷ்ட பரிபாலனம்’ என்று கூறப்படுவதுபோன்ற “கெட்டவர்களை அழித்து நல்லவர்களைக் காப்பாற்றுவதற்காக” அல்ல. மாறாகää “பாவிகளை மீட்கவே கிறிஸ்துக் இயேசு இவ்வுலகத்ததிற்கு வந்தார்@ இக்கூற்று உண்மையானது@ எல்லாராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது” (திமொத்தேயு 1:15) என புனித பவுல் கூறுகின்றார். பாவத்திற்கு அடிமைப்பட்டுக்கிடந்த மனிதனை மீட்கவே இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். ஆகவே கிறிஸ்மஸ் என்பது இரட்சிப்பின் விழாää மீட்பின் விழாää விடுதலையின் விழா.

  உலக சரித்திரத்திலே மிகப்பெரிய விஞ்ஞானிகளில் ஒருவராகிய தோமஸ் அல்வா எடிசனுடைய வாழ்க்கையின் இறுதிக் காலத்தில்; அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது@ “நீங்கள் இதுவரை கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளில் மிகச்சிறந்ததாக நீங்கள் எதைக் கருதுகின்றீர்கள்?” என்பதே அக்கேள்வி. இதற்கு அந்த மாபெரும் விஞ்ஞானி பதில் சொன்னார்ää “இதுவரை நான் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளிலே மிகச்சிறந்த கண்டுபிடிப்பு எனது பாவத்தில் இருந்து என்னை மீட்க இயேசுக்கிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்தார் என்ற கண்டுபிடிப்பே ஆகும்”.

  இங்கே இரண்டு விடயங்கள் நமது அவதானத்திற்குரியன. ஒன்று இயேசு கொண்டுவந்த மீட்பைää இரட்சிப்பை அனுபவிப்பது மற்றது கொண்டாடுவது. முதலாவது நடைபெற்றால்தான் இரண்டாவதற்கு அர்த்தம் இருக்க முடியும். ஆனால் இன்றைய உலகின் நடைமுறை என்ன? கிறிஸ்து கொண்டுவந்த மீட்பைää இரட்சிப்பை அனுபவிக்காமல் வெறும் கொண்டாட்டங்களோடு கிறிஸ்மஸ் விழா ‘வழக்கம்போல’ää ‘பழக்கதோசமாக’ää ‘வருடாந்த நிகழ்வாக’ நிறைவுபெற்று விடுகின்றது!

கிறிஸ்மஸ் என்பது இறைபிரசன்னத்தின் விழா

  கிறிஸ்துவின் பிறப்பு விழா “கடவுள் நம்மோடு இருக்கின்றார்” என்ற ஆறுதலின் செய்தியைää மகிழ்ச்சியின் செய்தியை நமக்குத் தரும் விழாவாகும். இயேசுவுக்குக் கொடுக்கப்பட்ட பெயர்களில் ஒன்று ‘இம்மானுவேல்’ என்பதாகும். இம்மானுவேல் என்றால் “கடவுள் நம்மோடு இருக்கிறார்” என்பது பொருளாகும். (மத்தேயு 1:23) இறைவனுடைய பிரசன்னத்தைää உடனிருப்பை உணருகின்றää அனுபவிக்கின்ற விழாவாக கிறிஸ்மஸ் அமைகின்றது.
  இயேசுவுக்கு வழங்கப்பட்ட பெயர்களில் ஒன்று ‘வாக்கு’ அல்லது ‘வார்த்தை’ என்பதாகும். “வாக்கு மனிதரானார் நம்மிடையே குடிகொண்டார்” (யோவான் 1:1) என்ற யோவானின் வார்த்தைகளில் இறைவன் மனிதரிடையே பிரசன்னமாகினார் என்ற உண்மை உணர்த்தப்படுகின்றது. “கடவுள் தன்மையில் விளங்கிய கிறிஸ்து கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. மாறாக தம்மையே வெறுமையாக்கி மனிதருக்கு ஒப்பானார்” பிலிப்பியர் 2: 6ää7) என பிலிப்பியருக்கு எழுதிய கடிதத்தில் புனித பவுல் குறிப்பிடுகின்றார்.
 இன்று தனிமையில்ää வெறுமையில் வாடும் மனிதனுக்கு இறைவன் தன்னுடன் இருக்கின்றார் என்ற செய்தி முக்கியமான ஆறுதலின் செய்தியாக அமைகின்றது. நாம் விசுவசிக்கும் கடவுள் எங்கோ வான மேகத்தில்ää ஆகாய மண்டலங்களில் வாழுகின்ற கடவுள் அல்ல@ மாறாக அவர் தம் மக்கள் மத்தியில் வாழுகின்றää குடிகொள்கின்ற கடவுள் என்பதை இவ்விழா உணர்த்தி நிற்கின்து.

கிறிஸ்மஸ் என்பது ஒளியின் விழா
  கிறிஸ்மஸ் விழாவை ‘ஒளி விழா’ என்ற பெயரில் கொண்டாடுவதை நாம் அறிவோம். ஏனெனில் இயேசு ஒளியாக உலகத்திற்கு வந்தார். “அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது” (யோவான் 1: 9) என யோவான் நற்செய்தியாளர் இயேசுவை அறிமுகம் செய்கின்றார். “உலகின் ஒளி நானே@ என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார்@ வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” (யோவான் 8:12) என இயேசுவே கூறியிருக்கின்றார்.
  “இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்ää நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச்செய்யவும்ää நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது” என லூக்கா நற்செய்தியாளர் இயேவின் பிறப்பைக் குறித்துக் கூறியுள்ளார்.

 இன்றைய உலகம் பாவத்தின்ää சாபத்தின் இருளில் மூழ்கிக்கிடக்கின்றது. இருளின் செயல்களான தீமைகள் இன்றைய உலகில் மலிந்துவிட்டன. இந்நிலையில் இயேசுவின் பிறப்பு ஒளியின் பிறப்பாகää கிறிஸ்மஸ் விழா ஒளியின் விழாவாக அமைந்துள்ளது.
கிறிஸ்மஸ் என்பது மகிழ்ச்சியின் விழா
  எல்லா மதங்களிலும் மனிதன் இறைவனைத் தேடிச்செல்கின்ற நிலைப்பாட்டையே காண்கின்றோம். ஆனால் கிறிஸ்தவத்தில்தான் இறைவன் மனிதனைத் தேடிவருகின்ற வினோதத்தைப் பார்க்கின்றோம். இது ஆச்சரியமானää அபூர்பமான ஒரு நிகழ்வாகும். இறைவன் மனிதனைத் தேடிவந்தது - இறைவனே மனிதனாக இந்த மண்ணில் வந்து பிறந்தது -  உண்மையில்ää “எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி” (லூக்கா 2:10) ஆகும்.

   இறைவன் மனிதனான இந்த நிகழ்வை - “எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டிய” இந்த நிகழ்வை உலக மக்கள் ஏற்றிப்போற்றிக் கொண்டாடுவது சாலவும் பொருத்தமானதே! தேவையானதே!  
  கிறிஸ்மஸ் காலம் வந்துவிட்டால் மனித மனங்களில் மகிழ்ச்சி பிரவாகித்து ஓடும். உலகத்தின் பெருநகரங்கள் உற்சாக வெள்ளத்தில் மிதக்கும். அலங்கார மின்விளக்குகள் அழகழகாக ஒளிரும். கிறிஸ்மஸ் பப்பாää கிறிஸ்மஸ் மரம்ää கிறிஸ்மஸ் கேக்ää கிறிஸ்மஸ் கீதங்கள்ää கிறிஸ்மஸ் விடுமுறைää கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் என உலகம் உற்சாகத்தில் திழைக்கும்.
 கிறிஸ்மஸ் விழா அண்மித்துவிட்டால் வர்த்தக நிலையங்கள் எல்லமே உஷார் அடைந்துவிடும். வண்ண விளக்குகளும்ää அலங்காரங்களும் எங்கும் நிறைந்திருக்கும். புத்தாடைää பலகாரங்கள்ää வான வேடிக்கைகள்ää கரோல் கீதங்கள் என கிறிஸ்மஸ் அண்மித்தால் எல்லோருடைய உள்ளங்களிலும் புத்துணர்வு ‘களை’ கட்டிவிடும். இதிலொன்றும் தவறில்லை. அளவானää ஆரோக்கியமான கொண்டாட்டங்கள் மனித வாழ்வுக்கு தேவையானதே.
 ஆனால் கிறிஸ்மஸ் விழாவின் அடிப்படையை மறந்துவிட்டுää இயேசு கொண்டுவந்த பாவமன்னிப்பின் அனுபவத்தைää புதுவாழ்வு அனுபவத்தை மறந்துவிட்டு வெற்று ஆடம்பரங்களிலும்ää கொண்டாட்டங்களிலும் மட்டும் மூழ்கிவிடுவது என்பது “கிறிஸ்து இல்லாத கிறிஸ்மஸ் விழாவாகவே” அமையும். இது ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது மட்டுமல்லää கண்டிக்கத்தக்கதும் ஆகும்.

கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத உலகம்
  இறைவன் மனிதனாகப் பிறக்க வந்தார். அவர் பிறக்க மனிதன் இடம்கொடுக்கவில்லை. இயேசு மனிதனாகப் பிறந்தது பெத்தலேகம் ஊருக்கு வெளியில் இருந்த மாட்டுத் தொழுவத்தில். இதை லூக்கா நற்செய்தியாளர்ää “விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்துää தீவனத் தொட்டியில் கிடத்தினர்” (லூக்கா 2:7) எனக் குறிப்பிடுகின்றார். மாடுகள் அடையும் கொட்டிலில்ää எளிமையின் கோலத்தில்ää புறக்கணிப்புக்கள் மத்தியிலே இயேசு ஓர் மனிதக் குழந்தையாகப் பிறக்கின்றார். உலகைப் படைத்த இறைவனுக்கு உலகில் பிறக்க சரியான இடம் கிடைக்கவில்லை!

   “ஓளி உலகத்திற்கு வந்தது. ஆனால் உலகு அவரை அறிந்துகொள்ளவில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை” (யோவான் 1: 10 – 11) என்ற நற்செய்தியாளர் யோவானின் வார்த்தைகள் அன்றும் இன்றும் உண்மையான வார்த்தைகளாகவே உள்ளன.
  மனிதன் இறைவனைப் புறக்கணித்தாலும் அந்த இறைவனோ மனிதனை விடுவதாக இல்லை. தனது அளவுகடந்த அன்பினால் அந்த மனிதனைத் தேடிவருகின்றார். இதுதான் கடவுளின் இரக்கம்! இதுதான் கடவுளின் இயல்பு!

நிறைவுரை
  கிறிஸ்மஸ் விழா என்பது அடிப்படையில் அன்பின் விழாää அமைதியின் விழாää சமாதானத்தின் விழா. மீட்பின் விழாää இரட்சிப்பின் விழாää இறைபிரன்னத்தின் விழாää ஒளியின் விழாää மகிழ்ச்சியின் விழா. இயேசு தனது பிறப்பின்மூலம் கொண்டுவந்த இந்த அன்பைää அமைதியைää சமாதானத்தைää மீட்பைää இரட்சிப்பைää இறைபிரசன்னத்தைää ஒளியைää மகிழ்ச்சியை அனுபவிப்பதும்ää அதைக் கொண்டாடுவதும்தான் கிறிஸ்மஸ் விழா.

  ஆனால் இன்றைய உலகின் அனுபவம் என்ன? இயேசு தனது பிறப்பிலே கொண்டுவந்த இந்த அரிய தெய்வீக மதிப்பீடுகளைää விழுமியங்களை இன்றைய உலகம் மறந்துவிட்டது. கிறிஸ்மஸ் விழாவின் உண்மையான அர்த்தம் மறக்கப்பட்டு அது இன்று வர்த்தக விழாவாகää வேடிக்கை விழாவாகää வாடிக்கை விழாவாக மாறிவிட்ட யதார்த்தத்தை கவலையோடு நோக்கவேண்டி உள்ளது. எனவே கிறிஸ்மஸ் விழா இந்த உலகத்திற்கு வழங்கும் அடிப்படையான பண்புகளை மீண்டும் கண்டுபிடிப்போம்@ வாழ்வாக்குவோம். இந்த உலகத்தை நாம் எல்லோரும் மகிழ்;ச்சியாக வாழும் இல்லிடமாக மாற்றுவோம். 


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv