வித்தியா எனும் சகோதரிக்காய்,,,,,,,,,,,,,


அழகிய மலராய் ஜொலித்தவள் வித்தியா
மலரை கசக்கி மண்ணில் புதைத்து விட்டார்கள் 
யார் அவர்கள்?
மேலை நாட்டவனா? இல்லை 
வேறு இனத்தவனா?இல்லை 
சகோதரனுக்கு சகோதரனாய் தோள் கொடுக்க வேண்டியவர்களே,,,


ஏன் இந்த வக்கிரத்தை செய்தீர்கள்.
தாயின் கருவறை சுவற்றின் மென்மை உணராதவர்களா நீங்கள்? 
குழந்தையின் பிஞ்சு விரல்களை அன்பாக தீண்டாதவர்களா நீங்கள்?
உன் தங்கை சகோதரியின் கைகள் பிடித்து நடவாதவர்களா நீங்கள்?
இவை அனைத்தையும் உங்கள் உணர்வால் உணர்ந்திருந்தால்
இப் பெண் மலரையும் கருக்கி இருக்க மாட்டீர்கள்,,,,,,,,,,,,,,,


உங்கள் அன்னை உம்மை பெற்றதற்காய் வெட்கப்படட்டும் 
உங்கள் சகோதரிகள் உன் கூட பிறந்த்ததற்காய் தலை குனியட்டும் 
உங்கள் பிள்ளைகள் இப்படி ஒரு தந்தைக்காய் அவமானப்படட்டும்.


வேட்கைக்காக வெறித்தனமாடி 
ஆயிரம் கனவுகளுடன் உதித்த மலரை
 உதிர்த்து இன்பம் கண்ட நீங்கள்
 அனைவரும் இவ் உலகில் வாழ
 தகுதியற்ற மனித மிருகங்கள் இல்லை இல்லை
 மிருகங்கள் கூட இப்படி வன்புணர்வு கொண்டதில்லை
 மனித உருவில் உள்ள அரக்கர்கள்.
ஓர் சகோதரி 

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv