கர்ப்ப காலத்தில் 'ஸ்கேன்' பரிசோதனையின் பங்களிப்பு

தற்­கா­லத்தில் எந்­தத்­து­றை­யிலும் புதிய தொழில்­நுட்­பங்கள் உள்­நு­ழைக்­கப்­பட்டு வேலைகள் திறம்­ப­டவும் துரி­த­மா­கவும் துல்­லி­ய­மா­கவும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அந்த வகையில் மருத்­து­வத்­து­றையை பொறுத்த வரை­யிலும் பல்­வே­று­பட்ட நவீன யுக்­திகள் சிகிச்­சை­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.


பெண் நோயியல் சம்­பந்­த­மான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்கு இவ்­வா­றான நவீன தொழில் நுட்ப உப­க­ர­ணங்கள், யுக்­திகள் மற்றும் பரி­சோ­த­னைகள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.
அதில் முக்­கி­ய­மான பரி­சோ­தனை தற்­கா­லத்தில் பாவிக்­கப்­பட்டு வரும் ஸ்கேன் பரி­சோ­த­னை­யாகும். இது கர்ப்­பக்­கா­லத்­திலும் சரி பெண்­களின் கர்ப்­பப்பை சூல­கங்கள் தொடர்­பான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­திலும் சரி வைத்­திய நிபு­ணர்­க­ளுக்கு மிகவும் உத­வி­யாக உள்­ளன.

கர்ப்­பக்­கா­லத்தில் ஸ்கேன் பரி­சோ­தனை செய்­வதால் உண்­டாகும் நன்­மைகள், செய்­வதன் தேவை மற்றும் விளை­வுகள் பற்றி இங்கு ஆராய்வோம்.

கர்ப்­பக்­கா­லத்தில் சாதா­ரண ஸ்கேன் பரி­சோ­தனை (Ultra sound scan) செய்­வதால் தாய்க்கோ சிசு­வுக்கோ எந்­த­வித சிக்­கல்­களும் ஏற்­ப­ட­மாட்­டாது. கர்ப்­பக்­கா­லத்தில் எந்­த­வொரு மாதத்­திலும் அதா­வது முதல் மாதம் தொடக்கம் இறுதி மாதம் வரைக்கும் தேவைக்­கேற்ற வகையில் எவ்­வித தயக்­கமும் இன்றி ஸ்கேன் பரி­சோ­தனை செய்ய முடியும். இப்­ப­ரி­சோ­தனை மூலம் வயிற்றில் உள்ள கருவின் ஆரோக்­கியம், அதன் சரி­யான திகதி, சிசுவின் வளர்ச்சி முறைகள், சிசுவின் வளர்ச்­சிக்­ குறை­பா­டுகள், சிசு இருக்கும் விதம், அங்­க­வீ­னக்­கு­றை­பா­டுகள், சிசுக்­களின் எண்­ணிக்கை மற்றும் தொப்புள், நச்­சுக்­கொடி இருக்கும் விதம் எனப்­பல விட­யங்­களை அறிந்து அவற்­றுக்­கான சரி­யான சிகிச்­சை­களை சரி­யா­கத்­ திட்­ட­மிட்டு சிறந்த கர்ப்­பக்­கால பரா­ம­ரிப்பை வழங்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது. இதன்­மூலம் ஆரோக்­கி­ய­மான சிறந்த குழந்­தையை பெற்­றெ­டுக்க முடியும்.

கர்ப்­பக்­கா­லத்தில் ஸ்கேன் பரி­சோ­த­னை­யா­னது பல்­வே­று­பட்ட நிலை­களில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. இது 3ஆம் மாதம், 5ஆம் மாதம், 8ஆம் மாதம் என பல்­வே­று­பட்ட காலப்­ப­கு­தி­க­ளிலும் தேவை­யேற்­படும் சந்­தர்ப்­பங்­களில் இடை­யி­டை­யேயும் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.

ஆரம்ப கர்ப்­பக்­கா­லத்தில் அதா­வது முதல் மூன்று மாதங்­களில் செய்­யப்­படும் ஸ்கேன் பரி­சோ­த­னையின் நோக்கம்

ஆரம்ப கர்ப்­பக்­கா­லத்தில் அதா­வது முதல் மூன்று மாதங்­களுள் செய்­யப்­படும் ஸ்கேன் பரி­சோ­த­னையில் பல முக்­கிய விட­யங்கள் அறி­யப்­படும். அதா­வது கரு­வா­னது கர்ப்­பப்­பையின் உள்ளே சரி­யான இடத்தில் தங்கி உள்­ளது உறு­திப்­ப­டுத்­தப்­படும். அத்­துடன் கரு­வா­னது ஆரோக்­கி­ய­மாக உள்­ளதா என்­ப­தையும் அறி­வ­துடன் எத்­தனை கருக்கள் உள்­ளன என்­ப­தையும் அறிய முடியும்.
அத்­துடன் இந்த ஸ்கேன் பரி­சோ­த­னையின் போதுதான் சிசுவின் பரு­மனை அளந்து சரி­யான பிர­சவ எதிர்­பார்ப்பு திக­தியைக் குறிப்­பி­டலாம்.
இவ்­வாறு சில பெண்கள் இறு­தி­யாக மாத­விடாய் வந்த திக­தியை மறந்­தி­ருந்தால் சரி­யான பிர­சவ எதிர்­பார்ப்பு திக­தியை முதல் மூன்று மாதங்­களில் செய்­யப்­படும் ஸ்கேன் மூலம் தான் சரி­யாக கண்­ட­றிய முடியும்.

அதற்கு பிந்­திய மாதங்­களில் ஸ்கேன் செய்து இவ்­வாறு திக­தியை சரி­யாக கணிப்­பிட முடி­யாது. அத்­துடன் முதல் 3 மாதங்­களில் செய்­யப்­படும் ஸ்கேனில்தான் பெண்­களின் கர்ப்­பப்­பையில் உள்ள பைப்பு­ரோயிட் கட்­டிகள் மற்றும் சூல­கத்தில் உள்ள சூல­கக்­கட்­டிகள் பற்­றிய தக­வல்­களை அறிய முடியும்.

கர்ப்­பக்­கா­லத்தில் சிசுவின் அங்­க­வீனக் குறை­பா­டு­களை கண்­ட­றிய மேற்­கொள்­ளப்­படும் ஸ்கேன் பரி­சோ­தனை

சிசு முழு­மை­யாக விருத்­தி­ய­டைந்து சகல பாகங்­களும் உரு­வான பின்னர் சிசுவின் உறுப்­புக்­களில் ஏதா­வது குறைகள் இருக்­கின்­றதா என ஸ்கேனில் அறிய முடியும். இவ்­வாறு அங்­க­வீ­னக்­ குறை­பா­டு­களை அறியும் ஸ்கேன் 5 மாத கர்ப்­பக்­கா­லத்தில் அதா­வது 18-20 வாரங்­களில் செய்ய முடியும். இதன்­போது சிசுவின் தலை, மூளை, முதுகு, நெஞ்சு, வயிறு, இரு­தயம், கால்கள் என பிர­தான உறுப்­புக்­களில் குறைகள் இருப்­ப­தனை அறிய முடியும்.

இவ்­வா­றான ஸ்கேன் பரி­சோ­தனை குறிப்­பாக பெண்­களில் நீரி­ழிவு நோய், காக்கை வலிப்பு, இரு­தய நோய் உள்ள போதும் மற்றும் சொந்த உற­வு­களில் திரு­மணம் செய்­து­கொண்­ட­வர்­க­ளிலும் ஆரம்ப கர்ப்ப காலத்தில் சரி­யாக போலிக் அசிட் (Folic acid) விட்டமின் மாத்­தி­ரை­களை எடுக்­கா­த­வர்­க­ளிலும் மேலும் ஆரம்ப கர்ப்ப காலத்தில் வேண்­டப்­ப­டாத மாத்­தி­ரை­களை உட்­கொண்­ட­வர்­க­ளிலும் இவ்­வா­றான அங்­க­வீன குறை­களை கண்­ட­றியும் ஸ்கேன் அவ­சியம். ஏனெனில் மேற்­கு­றிப்­பிட்­ட­வர்­களில் சிசுவில் சில குறைகள் வரு­வ­தற்கு சிறிய வாய்ப்­புக்கள் உள்­ளன. அத்­துடன் 35 வய­துக்கு மேற்­பட்ட பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போதும் இது­போன்ற ஸ்கேன் பரி­சோ­தனை அவ­சியம்.

நிற­மூர்த்த குறை­பாட்டால் ஏற்­படும் டவுன்ஸ் குழந்­தை­களை (Down's syndrome) கண்­ட­றியும் ஸ்கேன் பரி­சோ­தனை

முதல் மூன்று மாதத்தில் செய்­யப்­படும் ஸ்கேனில் சிசுவின் கழுத்தில் பிற்­ப­கு­தியின் தடிப்பை அளந்து இதில் சற்றுக் கூடு­த­லாக தடிப்­ப­டைந்­தி­ருந்தால் டவுன்ஸ் வியாதி குறித்து சந்­தேகம் கொள்ள முடியும். அத்­துடன் சிசுவின் மூக்கின் எலும்பு விருத்­தி­ய­டை­யாத தன்­மை­யையும் பார்க்க முடியும். இவ்­வாறு டவுன்ஸ் சிசு குறித்து சந்­தேகம் இருந்தால் இதனை உறு­திப்­ப­டுத்த மேலும் சில பரி­சோ­த­னை­க­ளாக இரத்­தப்­ப­ரி­சோ­தனை மற்றும் சிசுவின் நிற­மூர்த்தப் பரி­சோ­தனை என்­பன செய்ய முடியும். இதன்­மூலம் இவ ற்றை உறு­திப்­ப­டுத்­தலாம்.

பிந்­திய கர்ப்­ப­காலத் தில் (8ஆம் ­மாதம்) செய்­யப்­படும் ஸ்கேன் பரி­சோதனை

8 மாதங்களில் செய் யப்படும் ஸ்கேன் பரி சோதனையில் சிசுவின் வளர்ச்சியை அறிய முடியும்.இதன் மூலம் சிசுவில் வளர்ச்சிக் குறைகள் இருப்பின் சிசுவை முன்கூட்டியே பிரசவிக்க முடியும். மேலும் இவ்வாறு எட்டு மாதங்களில் செய்யப்படும் ஸ்கேன் மூலம் சிசு இருக்கும் விதம், தொப்புள் நச்சுக்கொடி அமைந்திருக்கும் விதம் என் பவற்றை அறியலாம்.
இவ்வாறு ஸ்கேன் பரிசோதனை கர்ப்பக் காலத்தின் வெவ்வேறு கால கட்டத்தில் செய்யப்படும்.இதன் மூலம் பலவித தகவல்களை பெற முடியும்.

4 கருத்துரைகள்:

chenlina said...

chenlina20160401
jordan retro 4
coach factorty outlet
louis vuitton purses
longchamp le pliage
hollister outlet
michael kors outlet clearance
nike roshe run
lebron 13
oakley sunglasses
christian louboutin
marc jacobs handbags
coach factorty outlet online
replica rolex watches
lebron 11
tod's shoes
coach outlet
michael kors outlet
coach factorty outlet
true religion outlet
asics shoes
air jordan shoes
toms shoes
ray ban sunglasses
louis vuitton outlet
coach outlet
michael kors outlet clearance
longchamp handbags
toms wedges
coach outlet
ray bans
true religion jeans
coach outlet
coach outlet
cheap jerseys
louis vuitton outlet
coach outlet
ray ban sunglasses outlet
insanity workout
cheap oakley sunglasses
louis vuitton handbags
as

林东 said...

ugg australia
cartier watches
ed hardy uk
michael kors outlet clearance
nike free flyknit 4.0
under armour outlet
michael kors outlet clearance
coach outlet online
fitflop shoes
polo ralph lauren
fitflop uk
lacoste outlet
mizuno running shoes
adidas pure boost
kate spade outlet
coach outlet online
michael kors outlet
michael kors handbags
louis vuitton outlet
ugg outlet
armani exchange
birkenstocks
asics gel nimbus
kate spade handbags
canada goose
hugo boss outlet
hollister clothing
canada goose parka
michael kors outlet
the north face
michael kors outlet
cheap oakley sunglasses
oakley sunglasses
true religion
yeezy boost 350 balck
0730xiong

chenlili said...

tory burch outlet
ralph lauren
manchester united jersey
michael kors outlet clearance
pandora jewelry
nike air max 90
soccer jerseys
nicholas kirkwood
ray ban sunglasses
nike outlet
20187.24chenjinyan

chenmeinv0 said...

jordans
kids jordans
longchamp outlet
ray ban sunglasses
jordan 13
ghd flat iron
nike pas cher
michael jordan
bulgari jewelry
bottega veneta
2018.8.10xukaimin

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv