உங்கள் அழகை காட்டும் கண்ணாடிகளை சுத்தப்படுத்த

சொந்தமாக வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் நிறைவேறி, கனவு இல்லம் கைகூடும் போது புதிய வீட்டை எப்படி அலங்கரிக்க வேண்டும் என்பதில் போதிய கவனம் செலுத்துவதில்லை. வீட்டின் உள் அலங்காரத்தில் கண்ணாடிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன, அலமாரிகளின் கதவுகள், முகம் பார்க்கும் கண்ணாடிகள், ஜன்னல்கள் என பல்வேறு இடங்களிலும் கண்ணாடிகளின் பயன்பாடு அதிகம் உள்ளது. கண்ணாடிகளை சுத்தப்படுத்தி பராமரிப்பது என்பது அவ்வளவு சுலபமான வேலையில்லை. 

 வெறும் தண்ணீரை கொண்டு மட்டும் துடைத்தாலும் அதிலிருக்கும் கறைகளை முற்றிலும் போக்குவதற்கு ஒரு சில பிரத்யேக பொருட்களை பயன்படுத்த வேண்டும். பொதுவாக கண்ணாடிகளை சுத்தப்படுத்த மென்மையான பருத்தி துணியை பயன்படுத்துவது நல்லது. மற்ற வகை துணிகளை பயன்படுத்தினால் கறைகள் போகாது என்பதுடன், அந்த துணிகளின் இழைகள் கண்ணாடிகளில் கோடுகளை போட்டு விடும். இதனால் கண்ணாடிகளின் ஆயுள் குறைந்து விடும். 

 ஈரமான துணியை கொண்டு கண்ணாடியை துடைத்தவுடன் சுத்தமான துணியை கொண்டு துடைப்பதற்கு பதிலாக செய்தித்தாள்களை பயன்படுத்தி துடைத்தால் கண்ணாடியில் உள்ள ஈரம் முற்றிலும் உறிஞ்சப்படுவதோடு, தண்ணீர் கறைகளும் அகலும். வெதுவெதுப்பான நீரில், சிறிது வெள்ளை வினிகரை சேர்த்து கலந்து கண்ணாடியின் மீது தெளித்து காகிதத்தை பயன்படுத்தி துடைத்தால் கண்ணாடிகள் புதியது போன்று மின்னும். எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து, கண்ணாடியில் தெளித்து காகிதத்தால் துடைத்தால் கண்ணாடிகள் பளிச்சென்று மின்னுவதோடு நல்ல நறுமணமும் வீசும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv