அதிசய கிராமம்.. ஒரே பெயரில் வாழும் 200 பேர்...

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் ஒரே பெயரில் 200 பேர் உள்ளதால், குழப்பத்தை தவிர்க்க ஒவ்வொருவரையும் அடைமொழியுடன் அழைக்கின்றனர். வத்தலக்குண்டு பகுதியில் காமாட்சிபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சென்றாயப் பெருமாள் மலைக்கோயில் ஒன்று உள்ளது. இப்பகுதி கிராமங்களில் சென்றாயப் பெருமாளின் பெயரை, சென்னமுத்து என ஆண் குழந்தைகளுக்கு சூட்டுவது வழக்கம்.

 காமாட்சிபுரம் கிராமத்தில் 200 குடும்பங்களை சேர்ந்த 800க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில் உள்ள 400 ஆண்களில், 200 பேருக்கு சுவாமி பெயரான சென்னமுத்து என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதால், ஒரே இடத்தில் கூடும் சமயங்களில், யாரேனும் சென்னமுத்து என்று கூப்பிட்டால், அந்த இடத்தில் உள்ள அனைத்து ஆண்களும் திரும்பி பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 இதனால் பெயரை வித்தியாசப்படுத்துவதற்காக வயதை கணக்கிட்டு, பெரிய சென்னமுத்து, சின்ன சென்னமுத்து என அழைக்கின்றனர். மேலும், இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், தொழில், தந்தை பெயர், பள்ளி, கல்லூரிகளின் பெயர் என ஏதாவது ஒன்றை சென்னமுத்து என்ற பெயருக்கு முன், அடைமொழியாக சேர்த்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv