ஒற்றைத் தலைவலியை போக்கும் தாம்பத்திய உறவு

ஒரு சில வகையான ஒற்றைத் தலைவலிகளுக்கு உடலுறவு முழுமையான அல்லது பகுதியளவிலான நிவாரணத்தை தரலாமென நரம்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். தாம்பத்திய உறவை மறுப்பதற்கு தலைவலியை காரணமாக காட்டாமல், காதலில் ஈடுபடுவது சிறந்ததென ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. 

 இந்த ஆய்வை ஜேர்மனியை சேர்ந்த முன்ஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்தியிருக்கிறார்கள். தலைவலி ஏற்பட்ட சமயத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபட்ட பாதிப் பேருக்கு நோய் அறிகுறிகள் நீங்கியதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

 உடலுறவின் போது உடற்தொகுதிக்குள் இயற்கை வலி நிவாரணியான என்டோபின்ஸ் என்ற பதார்த்தம் வெளியிடப்படுகிறது. இது தலைவலியை குறைப்பதாக அல்லது முற்றிலும் நீக்கி விடுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv