சூரிய ஒளி பட்டால் நிறம் மாறும் டி சர்ட்

நவீன ஆடைகளை விரும்பி அணிபவர்களுக்காக புதிய வகை ஆடை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

புறஊதா கதிர்கள் செறிவூட்டிய மை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு உள்ள இந்த டி சர்ட் சூரிய வெளிச்சம் நேரடியாக பட்டால் அதன் நிறம் மாறும்.
கறுப்பு மற்றும் வெள்ளை நிற படங்கள் அனைத்தும் சூரிய வெளிச்சத்தில் படும்பொழுது, நிறம் மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதற்காக வடிவமைப்பாளர்கள் மேற்கொண்டு உள்ள முயற்சியினால் இதுவரை 7 வடிவங்களில் ஆடைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.
இந்த ஆடைகள் கடந்த 9ம் திகதி முதல் 12ம் திகதி வரை அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற பீரீஸ் கலை திருவிழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

அதன்பின்பு வருகிற மே 18ம் திகதி வரை லண்டன், நியூயோர்க் மற்றும் டோக்கியோ ஆகிய நகரங்களில் தெரிவு செய்யப்பட்ட கடைகளில் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து கலை மற்றும் நாகரீக ஒருங்கிணைப்பு தலைவர் கூறுகையில், டி சர்ட் தொகுப்புகளை உருவாக்கி தரும்படி நிறுவனம் ஒன்று எங்களிடம் கேட்டது. அதன்படி, அதற்கு தேவையான ஓவியர்களை கொண்டு படங்கள் உருவாக்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv