சூரியனை விட 1300 மடங்கு பெரிய மஞ்சள் நட்சத்திரம் (வீடியோ இணைப்பு)

சூரியனை விட மிகப்பெரிய 1300 மடங்கு பெரிய மஞ்சள் நிற நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிலியின் அடகாமா என்ற இடத்தில் மிகப்பெரிய டெலஸ்கோப் உள்ளது, இதன்மூலம் விண்வெளியில் உள்ள கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மஞ்சள் நிற அதாவது சூரியனை விட 1300 மடங்கு மிகப்பெரிய நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரான்சில் நைஸ் என்ற இடத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தை சேர்ந்த ஆலிவர் செகினியூ தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், இந்த நட்சத்திரம் பூமியில் இருந்து 12 ஆயிரம் ஒளி தூரத்தில் உள்ளது என்றும், சூரிய குடும்பத்தை சேர்ந்தது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நட்சத்திரங்களில், 10வது மிகப்பெரிய நட்சத்திரம் இதுவாகும், இதற்கு H.R.5171- A என பெயரிட்டுள்ளனர்.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv