அரியவகை டைனோசர் கண்டுபிடிப்பு- படங்கள்

அமெரிக்காவில் 6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்த புதிய வகை டைனோசரின் படிமங்களை தொல்லியர் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

வட அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள டக்கோட்டாவில் பாறைப் படிமங்களை ஆய்வு செய்கையில் இந்த அரிய வகை டைனோசர் கிடைத்துள்ளது.

இவ்வகை டைனாசர் முதலை மற்றும் ஈமூ கோழிக்கு நிகரான உடலமைப்பை கொண்டது.

சுமார் 200 கிலோ எடையும் ஒன்றரை மீற்றர் உயரமும் கொண்ட இவ்வகை உயிரினங்கள் மேசபோட்டேமியாவின் இதிகாசங்களில் பேய்ப் பறவை என குறிப்பிடப்பட்டுள்ளன.

கூரிய மூக்கு மற்றும் இறகு கொண்டு ‘அன்சு’என அறிவியல் ரீதியாக என்றழைக்கப்படும் இந்த டைனோசர் வகைகளுக்கு பற்களோ, நகங்களோ இல்லை.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகையில், டைனோசர்களில் ‘ஓவிரப்டோரோசர்ஸ்’ என்று அறியப்படும் இவ்வகை உயிரினங்கள் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்திருக்கக் கூடும் என கருதுவதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது கிடைத்துள்ள இப்புதுவகை டைனோசரின் உடல் அமைப்பை வைத்து ‘நரகத்தில் இருந்து வந்த கோழி’ என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv