சூரிய வெடிப்பால் 44 மைல் வேகத்தில் பாயும் விண்வெளி கதிர்வீச்சு

சூரியனில் நேற்று ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப்பால் 44 லட்சம் மைல் வேகத்தில் விண்வெளி கதிர்வீச்சு வெளியாகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சூரியனின் மையத்தில் உள்ள கரோனா எனப்படும் அதன் கரு ஹைட்ரஜன், ஹீலியம், ஆக்ஸிஜன், கார்பன், நியான், இரும்பு உள்ளிட்டவைகளால் ஆனது.

இதில் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக இணைந்து ஹீலியத்தை உருவாக்குவது தான் சூரியனின் வெப்பத்துக்குக் காரணம். இந்த அணு இணைப்புகளின்போது வெளிப்படும் சக்தி தான் வெப்பமாக வெளிப்படுகிறது.

அப்போது உருவாகும் மிக அதிக சக்தி கொண்ட காமா கதிர்கள் தான் போட்டான்களாக மாறி நமக்கு சூரிய வெளிச்சத்தைக் கொண்டு வருகின்றன. இந்த போட்டான் கதிர்கள் சூரியனின் மையப் பகுதியில் இருந்து அதன் வெளிப்பகுதிக்கு வரவே 10,000 முதல் 1.7 லட்சம் ஆண்டுகள் வரை ஆகும்.

சூரியனில் நடக்கும் இந்த அணு உலை இணைப்பின்போது உருவாகும் கூடுதலான சக்தியும் வெப்பமும் சூரிய வெடிப்புகளாக அவ்வப்போது வெளியேறுகிறது. அப்போது சூரியனிலிருந்து அதிக வெப்பத்திலான வாயுக்கள் பிளாஸ்மாவாக பீய்ச்சிடிக்கப்படும்.

இந்த பிளாஸ்மா தன்னுடன் சுமந்து வரும் பயங்கரமான மின் காந்த கதிர்கள் பூமி உள்ளிட்ட மற்ற கிரகங்களுக்கு பெரும் பாதிப்புகளை உருவாக்குகின்றன. பூமியி்ல் உள்ள வளிமண்டலமும் அதிலுள்ள வாயுக்களும் நம்மை இந்த மின்காந்த கதிர்வீச்சுக்களில் இருந்து பாதுகாத்து விடுகின்றன.

இல்லாவிட்டால் சூரியனின் பிளாஸ்மா அலைகள் தாக்குதலில் பூமி என்றைக்கோ பஸ்மாகியிருக்கும்.

சூரியனின் மேற்பரப்பில் இவாறு அடிக்கடி வெடிப்புகள் ஏற்படுவது உண்டு, பூமியை நோக்கிய திசையில் இந்த சூரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதை பல தொலைநோக்கிகளும் பல செயற்கைக்கோள்களும் படம் பிடித்து உள்ளன.

சூரியனில் நேற்று காலை கடுமையான வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் விண்வெளியில் மணிக்கு 44 லட்சம் மைல் வேகத்தில் விண்வெளி கதிர்வீச்சு வெளியாகும் என்றும் ஆனால் இது பூமியை தாக்காது எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv