விரல்களினால் மிக அற்புதமான பெயிண்டிங் வரைந்து சாதனை செய்து வரும் அமெரிக்க பெண்

அமெரிக்காவில் உள்ள ஒரு பெண் ஒருவர் பிரஷ் மற்றும் எவ்வித உபகரணங்களின் உதவியின்றி வெறும் விரல்களினால் மிக அற்புதமான பெயிண்டிங் வரைந்து சாதனை செய்து வருகிறார். இவர் வரைந்த பெயிண்டிங்களை பார்க்கும்போது நிஜத்தில் இருப்பவற்றை எடுத்திருக்கும் போட்டோகிராப் போலவே இருக்கிறது என்பதுதான் இதில் ஆச்சரியம். அமெரிக்காவின் நியூயார்க் நகரின் புருக்ளீன் பகுதியை சேர்ந்த 31 வயது Zaria Forman என்பவர் தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரர். 

இவர் கடல், பனிமலைகள் முதலியவற்றை பெயிண்டிங் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் வரையும் பெயிண்ட்ங் எதற்குமே பிரஷ்ஷை பயன்படுத்துவதில்லை. தன்னுடைய விரல்களில்தான் அனைத்து பெயிண்டிங்களையும் வரைவார். இவருக்கு இம்மாதிரியான பெயிண்டிங்கை வரைவதற்கு இவருடைய தாயார் Rena Bass Forman அவர்கள்தான் ஆலோசனையும் பயிற்சியும் கொடுத்தார்.


 ஆனால் இவருடைய பெயிண்டிங்களை பார்ப்பதற்கு தற்போது அவருடைய தாயார் உயிரோடு இல்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம். இவருடைய பெயிண்ட்ங்களை David Fincher மற்றும் Kevin Spacey ஆகிய இயக்குனர்கள் தாங்கள் இயக்கிக்கொண்டிருக்கும் டிவி சீரியல்களுக்கு பின்னணியாக வைப்பதற்காக பெரும் விலை கொடுத்து இவரிடம் இருந்து வாங்கி செல்கின்றனர். இவருடைய பெயிண்ட்ங்கள் சுமார் $6,000 முதல் $9,000 வரை விலைபோவதாக கூறப்படுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv