முருகப் பெருமானுக்கு இன்று தைப்பூசம்.

உலகம் முழுவதும் நிறைந்து வாழும் இந்துக்கள் விரதமிருந்து சிறப்பாக கொண்டாடுகின்ற
திருவிழாக்களில் முருகப் பெருமானுக்குகந்த பெருவிழா தைப்பூசமாகும்.

தைப்பிறப்பின் பின் 27 நட்சத்திரங்களில் ஒன்றான பூச நட்சத்திரம் தை மாதத்தில் கூடிவரும் நாளே தைப்பூசமாகும். இது இந்த 2014 ஆண்டின் ஜனவரி 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகும்.

நாட்டிலுள்ள சகல முருகன் ஆலயங்களிலும் பரிவார மூர்த்தியாக ஏனைய ஆலயங்களில் உள்ள முருகன் ஆலயம் முன்பாகவும் இடம்பெறுகின்றது. இன்றைய தைப்பூச நன்நாளில் எமது சுபகாரியங்களான வித்தியாரம்பம், குழந்தைகளுக்கு காது குத்தல், புதுமனை புகுதல், புதுகணக்கு ஆரம்பித்தல், புதிய தொழிற்துறை ஆரம்பித்தல் மற்றும் திருமண பொருத்தங்கள் போன்ற சுப காரிய நிகழ்வுகளுக்கு மிக சிறப்பாக நாளாக சொல்லப்படுகின்றது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv