அன்புக்குரியவர்களின் உருவப்படங்களை உள்ளங்கையில் பின்னும் ஓவியர்


தனது அன்­புக்­கு­ரி­ய­வர்­களின் உரு­வப்­ப­டங்­களை உள்­ளங்கை தோலில் நூலால் பின்னி ஸ்பெயினைச் சேர்ந்த ஓவியர் ஒருவர் புதுமை படைத்­துள்ளார்.

வெரி­யரோ நகரைச் சேர்ந்த டேவிட் கதா என்ற மேற்­படி 21 வயது ஓவியர், வலியைப் பொருட்­ப­டுத்­தாது தனது காதலி தமரா உள்­ள­டங்­க­லான குடும்ப உறுப்­பி­னர்­களை உள்­ளங்கை தோலில் ஊசி­யையும் வர்ண நூல்­க­ளையும் பயன்­ப­டுத்தி பின்னி வடி­வ­மைத்­துள்ளார்.
மேற்­படி மிகவும் சிர­மமும் வலியும் தரக்­கூ­டிய உரு­வப்­பட கலைப் படைப்­பொன்றை உரு­வாக்க அவர் 4 மணித்­தி­யால நேரத்தை செல­விட்­டுள்ளார்.

அந்த உரு­வப்­ப­டத்தை பின்னி முடித்­ததும் அதனை அவர் உரித்­தெ­டுக்­கையில் உள்ளங்கையில் லேசாக இரத்தக் கசிவு ஏற்­ப­டு­கி­றது.

இது தொடர்பில் டேவிட் கதா விப­ரிக்­கையில்,
''நான் மிகவும் நேசிப்­ப­வர்­களை உள்­ளங்­கையில் பின்­னு­கையில், அவர்கள் எனது வாழ்வு தொடர்பில் தமது அடை­யா­ள­மொன்றை எனது கையில் விட்டுச் செல்­கின்­றனர். இதன் போது ஏற்­படும் வலி ஒரு பொருட்­டல்ல'' என்று கூறினார்.

அவர் தனது சகோ­த­ரனான ஜாவியர், தாத்­தா­வான கதா, அத்­தை­யான பி, தனது தந்தை, தனது காத­லி­யான தமரா, பாட்­டி­யான ஜொஸப்­பினா, நண்­ப­ரான கார்லொஸ், ஆசிரியரான சியுகோ மற்றும் பலரது முகங்களை தனது உள்ளங்கையில் பின்னியுள்ளார்0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv