உடற்பருமனைக் குறைப்பதில் சிறந்த முறை எது?

இலங்கை, இந்தியா போன்ற தெற்காசிய நாடுகள் எதிர்காலத்தில் சந்திக்கவிருக்கும் மிகப்பெரிய மருத்துவ சவால்களில் நீரிழிவிற்கு அடுத்தபடியாக இடம்பெற்றிருப்பது உடற்பருமன் பிரச்சனைத்தான். இதற்காக மருத்துவ உலகம் பேரியாட்ரிக், லைபோசெக்சன், சுப்பர்பிஷியல் லைபோசெக்சன் எனப் பலவகை சத்திர சிகிச்சைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதில் எதைப் பின்பற்றுவது என்பதில் பலருக்கு சந்தேகம் வரலாம். 

இது தொடர்பாக இத்துறைசார் நிபு ணர்களைக் கேட்டறிந்ததை இங்கு காண்போம். "உடலில் உள்ள கொழுப்பை அகற்ற முதலில் லைபோசக்சன் என்ற சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டது. இது பெரும் வரவேற்புப் பெற்றாலும், சத்திர சிகிச்சைக்கு பின்னரான பரா மரிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டி ஏற்பட்டது. சிறு கவனக் குறைவு ஏற்பட்டாலும், மீண்டும் உடற்பருமனால் பாதிக்கப்படும் வாய்ப்பு உருவானது.

 இருந்தாலும் உடற்பருமன் பிரச்சினைக்கு ஒரு பாதுகாப்பான சிறந்த நிவாரணமாகவே லைபோசக்சன் சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம்" என்று தன் அனுபவத் தைக் கூறுகிறார் டொக்டர் கிருஷ்ண ஹண்டே.

 "உடல் எடையைக் குறைப்பதில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமான சிகிச்சை பேரியாட்ரிக் சத்திர சிகிச்சை. இச்சிகிச்சையின்போது, வயிற்றுப் பகுதியில் அதாவது உணவுப்பையில் அதிகளவு உணவு ஏற்காதவாறு ஒரு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

 இவ்வகையிலான சத்திர சிகிச்சைக்குப் பின் ஒருவர் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவு குறைக்கப்படுகிறது. இதனால் உடற்பருமன் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கிறது. ஆனால் இச்சிகிச்சையால் உடலுக்குத் தேவையான சக்தி கிடைப்பதில்லை என்று இந்த சிகிச்சையை மேற் கொண்டவர்கள் குற்றம் சுமத்தினர். இருந்தாலும் பலர் இதைப் போற்றத்தான் செய்தனர். காரணம், இவ்வகையிலான சத்திர சிகிச்சை மூலம், மூன்று மாதங்களில் 30 முதல் 45 கிலோ வரையிலான நிறையை குறைக்கமுடிந்ததே" என்றார் டொக்டர் குமரன்.

 "உடற்பருமன் பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் (ஒபீசிட்டியால் பாதிக்கப்பட்டவர்கள்) என்னை அணுகி, தம்முடைய உடல் எடையைக் குறைத்து, தம் உடலுக்கு ஒரு அமைப்பு கொடுத்துவிடுமாறும், அதன் பிறகு உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி செய்து உடலைப் பராமரித்துக் கொள்வதாகவும் கூறுவோருக்கு நான் சுப்பர் பிஷியல் லைபோசக் சன் என்ற சத்திர சிகிச்சையை மேற்கொள்கிறேன். 

அதேபோல் சில ஆண்களுக்கு மார்பகப் பகுதி யில் அதிக கொழுப்பு சேர்ந்துவிடும். அவர்களுக்கும் இந்த சிகிச்சையைத்தான் செய்கிறேன். அதேநேரம், 'உடற்பயிற்சி செய்யமாட் டேன். உணவுக்கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க மாட்டேன். என் உடலிலிருந்து கொழுப்பை உறிஞ்சி எடுங்கள்' என்று கேட்டால் நான் ஒரு போதும் ஒப்புக்கொள்ள மாட்டேன். அதாவது உடல் எடை அவர்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தடையாக இருந்து, உடல் எடையைக் குறைந்தால் வேகமாக இயங்கலாமே என்ற எண்ணமுடையவர்களாக இருந்தால்தான் இந்த சுப்பர்பிஷியல் லைபோசக்சன் சிகிச்சையைச் செய்வோம். இந்த சிகிச்சைக்குப் பிறகு நாங்கள் கூறும் உணவுக் கட்டுப்பாட்டை உறு தியாகக் கடைப்பிடித்தால் ஆரோக்கியமான அள விற்கு உடல் எடை குறையும்." "உடற்பருமன் பிரச்சினைக்காக மேற்கொள்ளப்படும் பேரியாட்ரிக் சத்திர சிகிச்சையில் வயிற்றுப்பகுதியின் கொள்ளளவு செயற்கையாகக் குறைக்கப்படுகிறது. 

இதனால் பலன் இருந்தாலும், எதிர்காலத்தில் சுருக்கப்பட்ட வயிற்றுப்பகுதியில் விற்றமின் பி சத்து கிரகிக்கப்படுவதில் குறைபாடு ஏற்படும். இதனால் ஆயுAள் முழுவதும் விற்றமின் பி கொம்ப்ளெக்ஸ் மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டியிருக்கும். பேரியாட் ரிக் சத்திர சிகிச்சை என்பது உடலுக்குள் செய்யப் படுவது. இவ்வகையான சிகிச்சையின் பின் உடல் எடையை 40 முதல் 60 கிலோ வரை குறைத் தவர்களும் உண்டு. 

உணவுக் கட்டுப்பாட்டை பின் பற்றாததால் 40 கிலோ வரை எடை கூடியவர்களும் உண்டு. ஆனால் நாங்கள் செய்யும் கொஸ்மெடிக் சத்திர சிகிச்சை என்பது, ஆயுள் முழுவதும் பாதுகாப்பானது. ஏனெனில் நாங்கள் கொழுப்பை மட் டுமே உறிஞ்சி எடுக் கிறோம். ஆனால் அதன்பின் நாங் கள் சொல்லும் உடற்பயிற்சி மற் றும் உணவுக் கட் டுப்பாட்டை உறுதியா கக் கடைப்பிடித்தால் போதும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv