200 ஒளி ஆண்டு தூரத்தில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு

சூரிய மண்டலத்தில், பூமியைப் போன்ற புதிய கிரகத்தை அமெரிக்க வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஹார்வர்டு- ஸ்மித்சோனியன் வான் இயற்பியல் மையத்தைச் சேர்ந்த டேவிட் கிபிங் இதுபற்றி தகவல் தருகையில்,

மற்றொரு கிரகம் சூரிய மண்டலத்தில் 200 ஒளி ஆண்டு தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கிரகம், பூமியை விட 60 மடங்கு பெரிதானது. இதில் அடர்ந்த வாயுக்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் கெப்ளர் விண்கலம் அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் இந்த கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

JOI-314 என பெயரிடப்பட்ட இந்த கிரகத்தின் வெப்பநிலை 104 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது.

எனினும் உயிரினங்கள் வாழ்வதற்கான உகந்த வெப்பநிலை இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv