மருத்துவ மேதை ஹிப்போகிரேட்டீஸ்

ஹிப்போகிரேட்டீஸ் - "அலோபதி மருத்துவத்தின் தந்தை' என்று அழைக்கப்படும் கிரேக்க மருத்துவர். கி.மு.460-இல் கிரேக்க நாட்டில் 'கோஸ்' தீவில் பிறந்தவர்.

பேய், பிசாசுகளால்தான் மக்களுக்கு நோய் வருகிறது என்றும் மந்திரம், மாந்திரீகம் போன்றவற்றால் நோய்களைக் குணமாக்கலாம் என்று நம்பிக் கொண்டிருந்த காலத்தில் இரத்தம், பித்தம், சளி போன்றவற்றால் வரும் கிருமிகளால்தான் நோய்கள் உண்டாகின்றன என்று கூறியவர்.

இயற்கை வழிமுறைகளாலும் வாழ்க்கைமுறையில் சிறிய மாற்றங்கள் செய்வதன் மூலமும் நோய்களைக் குணமாக்க முடியும் என்று சொல்லி அலோபதி மருத்துவத்துக்கு அடித்தளம் அமைத்தவர்.

எந்த நோயாக இருந்தாலும் நோயாளியை நேரடியாகப் பரிசோதித்து நோயின் அறிகுறிகளைக் கவனித்து நோயைக் கணித்து சிகிச்சை தர வேண்டும் என்று மருத்துவர்களுக்கு வழி காட்டியவர்.

இறந்தவர் உடலைப் பிளந்து பரிசோதிப்பது பாவம் என்று நம்பிக்கொண்டிருந்த காலத்தில் உடலை முழுமையாகப் பரிசோதித்து மனிதனின் உடற்கூறு பற்றி முதன்முதலில் விளக்கியவர்.

கிரேக்க நாட்டிலும் ஆசியா மைனர் பகுதிகளிலும் மருத்துவம் செய்துகொண்டே மக்களுக்குப் போதித்தவர்.
இவருடைய மருத்துவ அனுபவங்களை ஏறக்குறைய எண்பது கையெழுத்துப் பிரதிகளில் எழுதி வைத்திருந்தார்.

மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் ஆற்ற வேண்டிய கடமைகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த "ஹிப்போகிரேட்டீஸ் உறுதிமொழி'யை இன்றைக்கும் அலோபதி மருத்துவர்கள் பின்பற்றுகின்றனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv