மரணத்திலும் உலக நாடுகளை ஒருங்கிணைத்த மண்டேலா! (வீடியோ இணைப்பு)

முன்னாள் தென் ஆப்ரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்கில் 90 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் தென் ஆப்ரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்கு நேற்று நடந்தது.

 ஜொஹன்னஸ்பர்க்கில் உள்ள எப்.என்.பி. அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 90 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். மண்டேலாவின் நினைவு கூட்டத்தில் கலந்து கொண்ட உலக நாடுகளின் தலைவர்கள் தங்களின் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் கூட்டத்தில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா மண்டேலாவை புகழ்ந்து பேசினார்.

 வரலாற்றின் மாபெரும் மனிதர் மண்டேலா என்று புகழாரம் சூட்டினார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நினைவு கூட்டத்தில் கலந்து கொண்டு மறைந்த மண்டேலா பற்றி உரை நிகழ்த்தினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மண்டேலா நினைவு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv