கலாநிதி நிமலதாசனுக்கு சிறந்த கல்வியியல் ஆராய்ச்சியாளர் விருது

பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதிவரும் திரு.நிமலதாசன் சிறந்த கல்வியியல் ஆராய்ச்சியாளர் விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

 யாழ் பல்கலைக்கழகத்தின் கணக்கியல்துறை விரிவுரையாளரான கலாநிதி பாலசுந்தரம் நிமலதாசனுக்கு 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்வியியல் ஆராய்ச்சியாளர் எனும் விருது இந்தியாவின் பாண்டிச்சேரி மானிலத்திலுள்ள விஞ்ஞானிகள், அபிவிருத்தியாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் எனும் அமைப்பால் (Association of Scientists, Developers and Faculties)டிசம்பர் 30ஆம் தேதி வழங்கப்படவிருக்கிறது.

 நிமலதாசன் தனது பாடசாலைக்கல்வியை பரித்தித்துறை காட்லிக் கல்லூரியிலும், பின்னர் யாழ்பல்கலையில் வணிகத்துறைப் பட்டத்தையும் முடித்துக்கொண்டு, பங்களாதேசில் சென்று மிக இளவயதிலேயே தனது கலாநிதிப்பட்டத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv