100 கோடி விண்மீன்களை படம் எடுக்கும் செயற்கைகோள்

100 கோடி விண்மீன்களை புகைப்படம் எடுப்பதற்காக ஐரோப்பிய விண்வெளி நிலையம் கையா என்ற அதிநவீன செயற்கைகோளை விண்ணிற்கு அனுப்பியுள்ளது. பால்வீதி மண்டலத்தில் பல ஆயிரம் கோடி விண்மீன்கள் உள்ளன.

 இதன் இருப்பிடம், நகரும் தன்மை போன்றவற்றை வரைபடமாக தயாரிப்பது என்பது மனிதகுலத்தின் பன்னெடுங்கால கனவாக இருந்து வந்தது. தற்போது இதன் ஒருபகுதியை மட்டும் புகைப்படம் எடுத்து அனுப்புவதற்காக "கையா" (GAIA) என்ற செயற்கைகோள் நேற்று ஐரோப்பிய விண்வெளி மையத்தால் அனுப்பப்பட்டுள்ளது. 

 ரஷ்ய தயாரிப்பான சோயூஸ் ராக்கெட் மூலம், பிரெஞ்ச் கயானா ஏவுதளத்தில் இருந்து இந்த கையா செயற்கைகோளானது வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 100 கோடி டொலர் மதிப்பிலான தொலைநோக்கி, ஏவப்பட்ட 42வது நிமிடத்திலேயே ராக்கெட்டை விட்டு பிரிந்து சென்றது. இது பால்வீதி அண்டத்தில் உள்ள கோடிக்கணக்கான விண்மீன்களைக் கணக்கெடுத்து, முப்பரிமாண வடிவிலான வரைபடமாகத் தயாரிக்க உதவப் போகிறது.

 மூன்றுவார பயணத்திற்கு பிறகு சுமார் 15 லட்சம் மைல்களுக்கு அப்பால் இந்த தொலைநோக்கி சென்றுவிடும். அப்போது அதன் பார்வையிலிருந்து பூமி மறைந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த தொலைநோக்கி நட்சத்திரங்களின் தூரம், வேகம், இயக்கம், திசை பற்றிய தகவல்களை துல்லியமாக அளிக்கும். 5 வருட காலம் அண்டவெளியில் சுற்றி ஆராயும் இந்த தொலைநோக்கி 50 ஆயிரம் கோள்கள் பற்றிய தகவல்களை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv