11 வயதில் தமிழ் மாணவி – உலகின் இளவயது பட்டதாரி

தகவல் தொழில்நுட்பத்தில் உலகின் மிக இளவயது பட்டதாரியாக, கண்டியைச் சேர்ந்த 11வயது தமிழ்ச் சிறுமியான வாசின்யா பிறேமானந்தா அறிவிக்கப்பட்டுள்ளார். 

 பிரித்தானிய கணினிச் சமூகம் (British Computer Society ) இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கண்டியிலுள்ள கொழும்பு அனைத்துலகப் பாடசாலையில் 8ம் வகுப்பில் கல்வி கற்று வரும் வாசின்யா, பிரித்தானிய கணினிச் சமூகத்தின் தகவல் தொழில்நுட்ப பட்டத்தை (BCS IT)பெற்றுள்ளார். 

 இவரே உலகில் தகவல் தொழில்நுட்பத்தில் ஆகக்குறைந்த வயதில் பட்டம் பெற்றவராவார். இவர் எட்டு வயதில் இருக்கும் போதே, இவர் கபொத சாதாரணதரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் ஏ தரச் சித்தியைப் பெற்று சாதனை படைத்திருந்தார்.

 அத்துடன், எட்டு வயதிலேயே கணினி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொண்ட இவர், உலகின் இளம்வயது இணையத்தள மேம்பாட்டாளராகவும் அறிவிக்கப்பட்டிருந்தார்.. 

 இவர் வர்த்தகரான பிறேமானந்தா நடராஜா மற்றும் லக்சிதா பிறேமானந்தா ஆகியோரின் மகளாவார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv