ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 9 வருடங்கள் நிறைவு

இலங்கைத் தீவில் ஆழிப் பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் ஒன்பது வருடங்கள் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை 9.25 தொடக்கம், 9.27 வரையான இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு, அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. 

 வலி சுமந்த இந்நாளில் தமிழர் தாயகம் எங்கும் அனுஷ்டிப்பு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டது. சுமாத்ரா கடற்பகுதியில் ஏற்பட்ட 9.7 என்ற நில அதிர்வினால் ஏற்பட்ட சுமார் 30 மீற்றர் உயரமான சுனாமி அலையினால் பல இலட்சம் மக்கள் காவு கொள்ளப்பட்டனர்.

 இலங்கைத்தீவில் 35000 பேர் மரணமடைந்தனர். கோடிக்கணக்கான சொத்து சேதம் ஏற்பட்டது. இந்து சமுத்திரத்தில் உள்ள 14 நாடுகளில் மொத்தமாக 2 லட்சத்து 30 ஆயிரம் ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைத் தீவின் வரலாற்றில் பதிவான மிகப்பெரிய இயற்கை அனர்த்தம் இதுவாகும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv