கல்லீரல் (LIVER)


மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான். உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. மனிதனின் உடல் சீராக இயங்க தேவையான ஐநூறுக்கும் மேற்பட்ட செயல்களை செய்வதோடு மட்டுமில்லாமல்,கெட்டுப் போனாலோ அல்லது அடிபட்டாலோ , மீண்டும் தன் பழைய நிலைக்கு வளர்ந்து செயல்படும் திறன் பெற்ற உடலின் ஒரே உறுப்பும் கல்லீரல் மட்டுமே. மார்பு எலும்புக்கூட்டிற்குள் வயிற்றின் மேல்புறத்தின் வலது பக்கம் இரைப்பைக்கு அருகில் இருக்கும் மிகப்பெரிய நீர்மம் சுரக்கும் உள்ளுறுப்பு .

கல்லீரல் மட்டும் தான் உணவை ஜீரணம் செய்வது, நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுப்பது என நம் உடலின் ரசாயனத் தொழிற்சாலையாக இயங்குகிறது. கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகளை ஜீரணிக்கச் செய்யும் பித்தநீரை கல்லீரல் தான் உருவாகுகிறது. கருவில் இருக்கும் குழந்தைகளின் சீரான இயக்கத்திற்குத் தேவையான இரத்தத்தை உருவாகுகிறது.

இரத்த சிவப்பணுக்களைச் சீர்செய்து இரத்ததை தூய்மைப்படுத்தும். வளர்சிதை மாற்றங்களில் கல்லீரலின் பங்கு மிக முக்கியம் வாய்ந்தது. உடலுக்கு தேவையான சக்தியை கொடுப்பதோடு நோய்த் தொற்றுக் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. ரத்தம் உறைவதற்கு தேவையான பொருட்களையும், ரத்த நாளங்களுக்குள் ரத்தம் உறையாமல் இருக்க வேண்டிய பொருட்களையும் உற்பத்தி செய்கிறது. உடல் இயக்கத்திற்கு தேவையான குளுகோஸ், கார்போஹைட்ரேட் , கொழுப்புச் சத்து போன்றவைகளை தேவைக்கேற்ப சேமித்து வைப்பதோடு , இரும்புச்சத்து, வைட்டமின் பி12, வைட்டமின் ஏ ஆகியவற்றையும் சேமித்து, உடல் வளர்ச்சிக்குத் தேவையான புதிய புரதச் சத்துகளையும் உருவாக்கும் ஆற்றல் மிகுந்த உறுப்பு கல்லீரல்.

சிறுகுடலிலிருந்து உறிஞ்சப்படும் உணவின் சத்துகள் இரத்தம் வழியாக கல்லீரலுக்குள் கொண்டு செல்லப்பட்டு அவையாவும் உடலுக்குத் தேவையான இரசாயனப் பொருள்களாக மாற்றப்படுகிறது. மேலும் அதில் இருக்கும் நஞ்சுகளைக் கழிவுப் பொருட்களாக மாற்றி சிறுநீரகம் வழியாக வெளியேற்றுகிறது.

முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள், பசிக்கும் நேரத்தில் உண்ணாமல் இருப்பது, இரவு பத்துமணிக்கு மேல் அளவுக்கு அதிகமாக உணவு உண்பது, இரவு அதிக நேரம் கண் விழிப்பவர்கள், அதிக காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்கள் சாப்பிடுபவர்கள், அடிக்கடி காபி பழக்கமுள்ளவர்கள் , மது அருந்துவது, பான்பராக் போடுவது, புகை பிடிப்பது, ஸ்டீராய்டு மாத்திரைகளை உட்கொள்வது, நீண்ட நாட்களாக வியாதிகளுக்கு மாத்திரைகளை உட்கொண்டு இருப்பது, மன அழுத்தம், மனக் கிளர்ச்சி போன்ற செயல்களால் கல்லீரல் வீக்கம் அடைகிறது. முக்கியமாக புகை, மது குடிப்பது, அதிகமான எண்ணெய் உள்ள உணவுகளை சாப்பிட்டுவதால் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து கல்லீரல் அழற்சி, கல்லீரல் சிதைவு ஆகிய நோய் வர வாய்ப்பு காரணமாக உள்ளது. அதிகமாக மது அருந்துபவர்களுக்கு கொழுப்பு படிந்த கல்லீரல் என கல்லீரல் சுருங்கி புற்று நோய் உண்டாக வழி வகுக்கும்.
கல்லீரல் சரியாக இயங்காத பட்சத்தில் சருமத்தில் பாதிப்பு, உடலில் அதிகபடியான சோர்வும் காணப்படும். கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களும் காணப்படும். கருவளையம் மற்றும் சோர்வான கண்கள் கல்லீரல் பாதித்து இருக்கிறது என்பதன் அறிகுறியே ஆகும்.

கல்லீரல் பாதிகக்கபட்டவர்கள் அசைவ உணவுகள், எண்ணையில் பொறிக்கப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், ஜங்க் புட், எளிதில் ஜீரணமாகாத உணவுகள், வேர்க்கடலை மற்றும் கிழங்கு வகைகள், மது, புகைப் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குறைந்தது ஆறு மணி நேரமாவது தூங்க வேண்டும். மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உப்பு, புளி குறைக்க வேண்டும், அதிக அளவு கீரைகள், பச்சை காய்கறிகள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
துளசியை இரவில் ஊறவைத்து, காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் மண்ணீரல் கோளாறுகள் ௭ல்லாம் வந்த சுவடு தெரியாமலும், பக்கவிளைவுகள் இல்லாமலும் போகும். 

கல்லீரல் மண்ணீரல் கோளாறுகளை வராமல் தடுக்க இனி புகை ,மது, கொழுப்பு உணவுகளை அதிகம் உட்கொள்ளும் முறைகளை தவிர்த்து சீரான உணவுப் பழக்கம், காலையில் உடற்பயிற்சி மேற்கொண்டு கல்லீரல் காப்போம். கல்லீரல் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் முக்கிய பங்கு வகிப்பதால் ஆரோக்கியமாக வாழ கல்லீரலை பாதுகாப்பது மிக முக்கியமாகும். அக்குபஞ்சர் அறிவோம்

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv