மச்ச பலன் மூலம் உங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பொதுவாகவே மச்சம் உடலில் இருந்தால் ஏதோ அதிர்ஷ்டம் உள்ளது என்று சொல்வார்கள். மச்சம் உள்ளவர்களின் வாழ்க்கையில் ஏதேனும் சற்று வித்தியாசமான அதிர்ஷ்டக் காற்று வீசிவிட்டால், உடனே அனைவரும் அவனுக்கு அந்த இடத்தில் மச்சம் இருப்பதால் தான், அவன் ஏதோ செய்யப் போக நல்ல அதிர்ஷ்டம் அடித்துவிட்டது என்று சொல்வார்கள்.

கண்கள்

மச்சமானது வலது கண்ணில் இருந்தால், கைகளில் எப்போதுமே பணம் இருக்கும். அதுவும் வேலையே இல்லாவிட்டாலும், பணம் கையில் எப்போதும் இருக்கும். அதுவே இடது கண்ணில் இருந்தால், அதிக திமிரு பிடித்தவர்களாக இருப்பர்.

புருவங்கள்

புருவத்திற்கு இடையில் மச்சம் இருந்தால், தலைமை பண்புகளுக்குரியவராக இருப்பர். அதுவே வலது புருவத்தில் இருந்தால், விரைவிலேயே நல்ல குணமுடையவரை திருமணம் செய்து கொள்வர். மிகவும் அதிர்ஷ்டசாலி.

இடது பக்கத்தில் இருந்தால், கையில் எப்போதுமே பணம் இருக்காது, நிறைய பிரச்சனைகளை சந்திப்பர். சொல்லப்போனால் ஒரு துரதிர்ஷ்டசாலி.

காதுகள்

மச்சம் காதுகளில் எங்கிருந்தாலும், நல்ல வருமானம் இருப்பதோடு, ஆடம்பர வாழ்க்கையுடன் வாழ்வர். அதே நேரம் அந்த ஆடம்பரத்தால் மூழ்கும் நிலை கூட ஏற்படும். ஆனால் காதுகளின் பின்புறம் இருந்தால், அவர்களுக்கு வரும் வாழ்க்கைத்துணை மிகவும் பணக்காரர்களாக இருப்பர்.

மூக்கு

மூக்கின் துனியில் மச்சம் இருந்தால் எதையும் விரைவில் சிந்திக்கக்கூடியவர். மேலும் அதிக சுயமரியாதைக் கொண்டவர்கள், எப்போதும் வெற்றி பெறக்கூடியவர்கள்.

அந்த மச்சமே வலது பக்கத்தில் இருந்தால் சிறு முயற்சியிலேயே அதிக பணத்தை பெறுவர். அதுவே இடது புறத்தில் இருந்தால், அனைத்துமே கெட்டதாக முடியும்.

கன்னம்

கன்னத்தின் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால் பெற்றோர்கள், கணவன், மனைவி மற்றும் உறவினர்கள் மீது மிகுந்த பாசம் இருக்கும். வாழ்க்கையை மிகவும் சந்தோஷமாக ரசித்து நீண்ட நாட்கள் வாழ்வார்கள்.

அதுவே இடது கன்னத்தில் இருந்தால் வாழ்க்கையே பிரச்சனையாக இருக்கும். ஆனால் திருமணம் ஆனப் பின், குழந்தைகளால் பிற்காலத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பர்.

உதடுகள்

உதட்டின் மேல்புறத்தில் இருந்தால் அனைவருக்குமே நல்லவர்களாக இருப்பர். அதுமே கீழ் உதட்டில் இருந்தால், அவர்கள் நன்கு சாப்பிடுவதோடு, நடிப்பதிலும், படம் வரைவதிலும் மிகுந்த ஈடுபாடு உடையவர்களாக இருப்பர்.

நாக்கு

நாக்கின் நுனியில் மச்சம் இருந்தால், தன் புத்திசாலித்தனத்தான பேச்சாலேயே அனைவரையும் கவர்ந்து விடுவர். மேலும் எதிர்காலம் செழிப்போடு இருக்கும்.

அதுவே நாக்கின் நடுவில் இருந்தால் கல்வியில் தடை, சரியான பேச்சாற்றல் இல்லாதது மற்றும் உடலில் பல பிரச்சனைகள் போன்றவை இருக்கும்.

நெற்றி

நெற்றி பெரிதாகவும், மச்சம் வலது பக்கத்திலும் இருந்தால் அது செல்வத்தை குறிக்கும். எப்போதும் சமூகத்தில் நல்ல செழிப்புள்ளவராக, நல்ல பெயர் மற்றும் செல்வாக்கோடு வாழ்வர். சிறந்த கொடை வள்ளல்.

ஆனால் நெற்றி குறுகலாகவும் மச்சமானது இடது பக்கத்திலும் இருந்தால், சுயநலவாதியாக, யாருக்கும் உதவி செய்யாமல் மற்றவர்களை மதிக்காமல் இருப்பர்.

கழுத்து

கழுத்தில் மச்சம் உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் 7 முறை அதிர்ஷ்டம் கிடைக்கும்.

இடது பக்க தோள்பட்டை

சொத்துகளுக்கு அதிபதியானவளாக இருப்பாள். பரந்த மனப்பான்மையுடன் பிறருக்கு தான தர்மம் செய்யும் குணம் இருக்கும்.

முதுகு

கண்களுக்குத் தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்களை செய்வர். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும். உடலில் ஆரோக்கியம் திகழும்.

உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டு

இவர்களது குடும்பம் இனிமையாக இருக்கும். கலாசார ரசனை உடைய பெண்களாக இருப்பார்கள். சிறந்த நிர்வாகியாகவும் இருப்பார்கள்.

தொடை

இடதுதொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷ்டப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமையை அடைவார்கள். வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும், யாருக்கு அடங்காத நபர்களாகவும் இருப்பர்.

முழங்கால்

இடது முழங்காலில் மச்சம் இருக்கும் பெண்கள் புத்தி கூர்மையானவர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும் இருப்பார்கள். அதுவே வலது முழங்காலில் என்றால் பிடிவாதக்கார்களாக இருப்பார்கள்.

3 கருத்துரைகள்:

chenlina said...

chenlina20160401
ray ban sunglasses uk
adidas originals shoes
nike air max
louis vuitton outlet stores
ray bans
oakley sunglasses outlet
oakley sunglasses wholesale
louis vuitton purses
coach outlet
louis vuitton handbags
michael kors handbags
coach outlet
ray ban sunglasses
cheap air max
coach outlet store online
ray ban sunglasses
kobe 8
louis vuitton handbags
kobe shoes
oakley sunglasses
celine handbags
ray ban sunglasses
ralph lauren
coach outlet online
tiffany and co
ugg outlet
ray ban sunglasses outlet
hollister
adidas superstars
cheap ray ban sunglasses
jordans for sale
jordan retro 13
coach outlet
hollister kids
cheap jordans
prada handbags
gucci belt
coach factorty outlet
ray ban sunglasses outlet
air max 95
as

Gege Dai said...

michael kors outlet online
louis vuitton neverfull sale
jordan pas cher
coach outlet store
christian louboutin outlet
ugg boots
ferragamo outlet
prada outlet
tory burch outlet
michael kors outlet
mulberry sale
oakley sunglasses sale
louis vuitton neverfull
ysl outlet
fitflops clearance
uggs clearance
adidas uk
lululemon pants
louis vuitton sunglasses
burberry outlet sale
nike roshe run shoes
mcm outlet
kobe 9 elite
ralph lauren pas cher
michael kors outlet
coach outlet online
uggs outlet
ugg uk outlet
cheap uggs
oakley sunglasses
tiffany and co
nike store uk
ugg boots
ferragamo shoes
coach outlet online
mbt shoes
ray ban sunglasses
0809jianxiang

chenlina said...

coach outlet
cincinnati bengals jerseys
ed hardy clothing
tory burch outlet
mizuno running shoes
abercrombie kids
pony shoes
hermes bags
ray ban sunglasses
oakley store
chenlina20170222

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv