நெல்சன் மண்டேலா - ஒரு வரலாறு

 வியாழக்கிழமை நள்ளிரவு தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபரும் கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடி 30 வருடங்களைச் சிறையில் கழித்தவருமான செல்சன் மண்டேலா சாவடைந்தார் என தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜாக்கோப் ஜுமா அறிவித்தார். பிரான்ஸ் நேரம் வியாழக்கிழமை 22h45 இற்கு இவரது சாவுச் செய்தி அறிவிக்கப்பட்டது. 

 இவரது மறைவுச் செய்திக்குப் பிரான்சின் பல அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் பிரான்ஸ் ஜனாதிபதியும் உடனடியான அஞ்சலிச் செய்திகளை வெளியிட்டுள்ளனர். "பிரான்ஸ் மக்கள் தென்னாபிரிக்க மக்களின் துக்கத்தில் ஆழமான ஆறுதல் கூறி எம் கரங்களை நீட்டுகின்றோம். நெல்சன் மன்டேலா ஒரு வரலாற்றைப் படைத்துள்ளார். அது தென்னாபிரிக்காவிற்கும் முழுமையாக உலகத்திற்கும் உரித்தானது. அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களிற்காகச் சளைக்காது தைரியமாக விடாமுயற்சியோடு போராடினார்.

 27 ஆண்டுகள் பலத்த சிரமங்களிற்கும் அவமதிப்புக்களிற்கும் தொடர்ச்சியான சிறவைப்புகளிற்குள்ளும் சிக்கினாலும் அவரது திட மனதின் தைரியத்தினால் தென்னாபிரிக்கர்களிற்கு ஜனநாயகத்தை மீட்டுத்தர இவரால் மட்டுமே முடிந்தது" என பிரான்சின் ஜனாதிபதி பிரான்சுவா ஒல்லாந்த் தெரிவித்துள்ளார். "ஆபிரிக்காவின் தந்தை நெல்சன் மண்டேலாவின் மறைவோடு ஆபிரிக்காவின் சுதந்திரத்தினதும் நல்லிணக்கத்தினதும் தூண் மறைந்து விட்டது" என பிரான்சின் வெளிவிகார அமைச்சர் லோரோன் பபியுஸ் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv