விவசாயிக்கு பத்மஸ்ரீ பட்டம்!

புதுச்சேரி மாநிலம், கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடபதி என்ற விவசாயிக்கு நேற்று பத்மஸ்ரீ விருது டெல்லியில் வழங்கப்பட்டது. தனது 19-வது வயது முதலே விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினார். தனது முதல் ஆராய்ச்சியில் உருவான கனகாம்பரம் செடியை 1970-ல் அறிமுகம் செய்தார். 100 ரகங்களை அறிமுகம் செய்துள்ளார். 

 சவுக்கு மரத்தில் 100 புதிய ரகங்களைக் கண்டறிந்துள்ளார். மூன்று தலைமுறையாகவே விவசாயத்தில் ஈடுபடும் குடும்பத்தில் பிறந்த வெங்கடபதி, 4-வது வரை மட்டுமே படித்தவர் என்பது குறிப்பிட தக்கது. இப்படிப்பட்டவர் பத்மஸ்ரீ விருது வாங்கியதைப் பெருமையாக வெளியில் சொல்ல வேண்டிய அரசங்கமே அவரது தனி புகைப்படத்தை வெளியிடவில்லை. 

ஊடகங்கள் ஒரு சிலவற்றைத் தவிர, இந்தச் செய்தியை யாருமே வெளியிடவில்லை. விவசாயம்தான் மனிதர்களுக்கு உயிர் நாடி. ஆனால், பொழுதுபோக்கு அம்சங்களான சினிமா, இசை, விளையாட்டு போன்றவற்றுக்காக விருது வாங்கியவர்களை எல்லாம் முன்னிலைப் படுத்துபவர்கள், விவசாயியை மதிக்கத் தவறிவிட்டனர். பத்மஸ்ரீ விருது வாங்கியவர்களுக்கான பாராட்டு விழாவைப் புது தில்லித் தமிழ்ச் சங்கம் நடத்தியது. அது குறித்த விளம்பரம் இரண்டு தினங்களுக்கு முன்பே, தினசரிகளில் வெளிவந்தது. அந்த விளம்பரத்தில் விவசாயி வெங்கடபதியின் பெயர் இடம் பெறவில்லை.

 ‘பசுமை விகடன்' மூலம் தில்லித் தமிழ் சங்க நிர்வாகிகளின் கவனத்திற்கு இந்தத் தகவலைக் கொண்டு சென்றோம். ‘‘கட்டாயம் அவரை அழைத்துப் பாராட்டுகிறோம்'' என்று சொன்னவர்கள், அதன்படியே சிறப்பாகப் பாராட்டியும் உள்ளார்கள். இதுவே ஒரு சினிமா நட்சத்திரமாக இருந்தால் எத்தனை குடம் பாலாபிசேகம் , வானுயரக் கட்டவுட்டுகள் , வாணவேடிக்கைகள் , மேளதாளங்கள் என ஊரையே அமர்க்களப் படுத்தி இருப்பார்கள்

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv