தற்போது அதிகரித்து வரும் கணவன்-மனைவி வயது வித்தியாசம்

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். ஆனால், மாறி வரும் காலச் சூழ்நிலைக்கேற்ப தற்போது, திருமணம் என்பது ஆண்களைப் பொருத்தவரை 30 வயதுக்குப் பிறகும், பெண்கள் என்றால் 25 வயதுக்குப் பிறகே நடைபெறுகிறது. 

 கணவன் – மனைவிக்கு இடையே வயது வித்தியாசம் என்பதும், 4 அல்லது 5 ஆண்டுகள் என்ற நிலை மாறி சில தம்பதிகளுக்கு 10 அல்லது 11 வயது வித்தியாசம் கூட ஏற்பட்டு விடுகிறது. சொந்தங்களில் திருமணம் முடிப்பவர்கள், மாமன் மகளை திருமணம் முடிப்பது என்பது, என்ற எண்ணத்தினால் தான். அதன் காரணமாகவே பல குடும்பங்களில் கணவன் – மனைவிக்கு இடையே வயது வித்தியாசம் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக்கூடும். பொதுவாக கணவனைக் காட்டிலும், மனைவிக்கு 5 வயது குறைவாக இருந்தால், முதுமைக் காலத்தில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க ஏதுவாகும் என்பதாலேயே நம் முன்னோர் இந்த வேறுபாட்டை கடைபிடித்து வந்துள்ளனர்.

 பெண்களைப் பொருத்தவரை குழந்தைப் பேறு, மாதவிடாய் போன்ற இயற்கையான நிகழ்வுகளால், பொதுவாகவே அவர்கள் 45 வயதைத் தாண்டிய நிலையிலேயே பலவீனம் அடைந்தவர்களாகிறார்கள். ஆனால் ஆண்கள் 50 வயதானாலும் கூட பெரிய அளவில் உடல் பாதிப்புகள் ஏதுமின்றி இயற்கையான முதுமைக் காலத்திலேயே பலவீனத்தை உணர்வார்கள். அதன் காரணமாகவே இந்த வயது வித்தியாசம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இன்றைய சூழ்நிலையில், 10 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொள்தல் என்பது வெகுசாதாரணம் எனலாம். 

26 அல்லது 27 வயதான பெண், 34 அல்லது 35 வயதான ஆண்களை திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், 10 வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்து கொள்ள இயலாது என்று சொல்லி விட முடியாது. அதில் உள்ள சாதக – பாதகங்களைப் பார்த்தல் அவசியமாகிறது.

 பாலுறவுக்கும், வயதுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். பாலுறவு என்பது மனதுடன் சம்பந்தப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கைத் துணை அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதை அறிந்து, செயல்படுதல் சிறப்பானது.

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv