பூமியை போன்று வாழ தகுதியுள்ள 200 கோடி கிரகங்கள்

பால்வெளியில் பூமியை போன்று வாழ தகுதியுள்ள 200 கோடி கிரகங்கள் இருப்பதாக நாசா மையம் தெரிவிதுள்ளது. விண்வெளியில் ஆய்வு நடத்த அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ‘லகப்லர்’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது கடந்த 4 ஆண்டுகள் தனது பகுதியை வெற்றிகரமாக முடித்துள்ளது. அதன்படி விண்மீன் கூட்டத்தில் உள்ள பால் வெளியில் உயிரினங்கள் வாழத் தகுதியுடைய பல கிரகங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளது.


 அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாஸ்ந்தி டெலஸ் கோப் அவற்றை போட்டோ எடுத்து அனுப்பியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் மேலும் அதிசயிக்க தக்க தகவலை லகப்லர் விண்கலம் தெரிவித்துள்ளது. அதன்படி பால்வெளியில் 200 கோடி கிரகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவை பூமியை போன்று உயிரினங்கள் வாழ தகுதி உடையவை. அவற்றின் மேற்பரப்பில் திரவ நிலையிலான தண்ணீர் படிவங்கள் உள்ளன. 

பாறைகள், மலைகளும் இருக்கின்றன. ஒவ்வொரு கிரகத்துக்கும் சூரியன் மற்றும் துணை கிரகங்களும் உள்ளன. எனவே, பூமி அளவுள்ள அந்த கிரகங்களில் சீரான தட்ப வெப்பம் நிலவுவதால் உயிரினங்கள் வாழ முடியும் என கலிபோர்னியா மற்றும் ஹவாய் பல்கலைக் கழக விண்வெளி விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

 அமெரிக்கா, ரஷியாவை தொடர்ந்து ஆய்வுக்காக இந்தியா ‘மங்கள்யான்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு முதன்முறையாக வெற்றிகரமாக அனுப்பியுள்ளது. இந்த நிலையில் பால் வெளியில் வாழத் தகுதியுடையது. 200 கோடி கிரகங்கள் இருப்பதாக ‘நாசா’ மையம் அறிவித்து இருப்பது போனஸ் தகவலாகும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv