கர்ப்ப காலத்தில் வேலை செய்யும் பெண்களின் கவனத்திற்கு.

பொதுவாக பெண்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் அவர்கள் கடைப்பிடிக்கும் உணவு பழக்கத்தை அவர்களால் சரிவர பின்பற்ற முடியாது. வீட்டு வேலைகள் பார்க்கும் போது, கிடைக்கின்ற இடைவேளைகளில் சத்தான உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக உண்ணுங்கள். இந்த நேரத்தில் உடல் ஆரோக்கியத்தை லேசான விஷயமாக எடுத்துக் கொள்ள கூடாது. ஆரோக்கியமான உணவுகளை சரியான அளவில் உண்ணுங்கள். 

முடிந்த வரை காரசாரமான உணவுகளையும், எண்ணெய் பலகாரங்களையும் தவிர்க்கவும். கர்ப்பிணி பெண்களோ குறைந்த அளவிலேயே இனிப்புகளை உட்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக இனிப்புகளை சாப்பிட்டால், பிரசவ நேரத்தில் சர்க்கரை நோய் வந்துவிடும். கர்ப்பமாக இருக்கும் போது, பட்டாசு வெடிப்பதில் உள்ள ஆபத்தை மனதில் வைத்துக் கொண்டு, அதனை விட்டு விலகி இருப்பதே நல்லது. 

 மேலும் பட்டாசுகளில் இருந்து வெளியேறும் புகை மற்றும் மாசுக்களில் அளவுக்கு அதிகமான கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு அடங்கியுள்ளது. இது தாய்க்கும், கருவில் இருக்கும் சிசுவுக்கும் தீமையை விளைவிக்கலாம். அதிலும் இந்த புகை தாய்க்கும், கருவில் உள்ள சிசுவுக்கும் சுவாச கோளாறுகளை கூட ஏற்படுத்தலாம். அதுமட்டுமின்றி கர்ப்ப காலத்தில் செவிச்சவ்வு சென்சிடிவ்வாக இருப்பதால், இரைச்சல் மாசு ஏற்படுவதும் கூட உங்களுக்கு நல்லதல்ல.

 வீட்டு வேலை செய்யும் போது, கர்ப்பிணி பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாற்காலி மீது ஏறி நிற்பது அல்லது சோப்பு நீரை கொண்டு எதையாவது துடைப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். வீட்டு வேலையில் ஈடுபட்டிருக்கும் போது தான் பல விபத்துக்கள் நேரிடும். முக்கியமாக குனிந்து வேலை செய்வது மற்றும் விளக்குகள் ஏற்றுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். வயிறு பெரிதாக இருப்பதால், குனிந்து விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றுவது வலியை ஏற்படுத்தலாம். அதே போல் தீக்காயம் ஏற்பட்டால், அந்த காயங்களை தாங்கும் சக்தியும் அவர்களுக்கு இருப்பதில்லை.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv