மின்னல் மூலம் செல்போனுக்கு சார்ஜ்

மின்னலில் உள்ள சக்தியின் மூலமாக செல்போனில் சார்ஜ் ஏற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டனிலுள்ள செüத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். 

 இக்கண்டுபிடிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான நீல் பால்மர் கூறியதாவது, நோக்கியா நிறுவனமானது இத்தகைய சவாலை எங்களிடம் ஒப்படைக்கும்போது நாங்கள் உற்சாகமானோம்.

 முதலாவது மின்மாற்றியின் மூலமாக மின்னல் சக்தியை ஒத்த 2,00,000 வோல்ட்ஸ் மின்சாரத்தை 300 மில்லி மீட்டர் இடைவெளியில் செலுத்தி, அந்த சமிக்ஞைகளை இரண்டாவது மின்மாற்றி மூலமாக செல்போனுக்கு சார்ஜ் ஏற்றும் அளவிலான மின்சாரமாக மாற்றினோம். இதன் மூலமாக இயற்கை சக்திகளை மனித பயன்பாட்டுக்கு கொண்டுவர இயலும் என்று கண்டறியப்பட்டுள்ளதாக பால்மர் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv