மன அழுத்தத்திலிருந்து விடுதலை தரும் உணவுகள்

உணவு என்பது நாம் உயிர் வாழ நமக்கான நாடி துடிப்பாக அமைகிறது. 

ஆனால் அதற்கு ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். உண்ணும் உணவே மருந்தாக அமையும் என்று நம் முன்னோர்கள் சொல்லுவார்கள் அல்லவா? ஆம், அது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.

உணவை கொண்டே பல வியாதிகளை குணப்படுத்தலாம். அப்படி சில வகை உணவுகளால் உங்கள் மனதை அமைதி படுத்த முடியும் என்பதை நீங்கள் அறிவீர்களா? உண்ணும் உணவு எண்ணத்தையும் உணர்ச்சிகளையும் பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

சரி, இப்போது மனதை அமைதிபடுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும் முதன்மையான 15 உணவுகளை பற்றி கொஞ்சம் பார்க்கலாமா...

நட்ஸ்

நட்ஸில் செலினியம் என்ற கனிமம் உள்ளது. இந்த கனிம குறைபாட்டினால் சோர்வு மற்றும் படபடப்பு ஏற்படும். அதனால் ஒரு கை நட்ஸ்களை உண்டால் மனம் அமைதியாக இருக்கும்.

சாக்லெட்

சாக்லெட்டில் உள்ள அனான்டமைன், மூளையில் உள்ள டோபமைன் அளவை கட்டுப்பாட்டில் வைக்கும். அதனால் மனம் அமைதி பெற்று, மன அழுத்தம் நீங்கும்.

கீரைகள்

கீரைகளில் மெக்னீசியம் வளமையாக உள்ளது. இது மனதில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும்.

பாஸ்தா

பாஸ்தாவில் மெக்னீசியம் வளமையாக உள்ளது. இதன் குறைபாட்டினால் தான் மன அழுத்தம் அதிகரிக்கிறது.

முழு தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் ரொட்டிகள்

முழு தானியங்களின் மூலம் தயாரிக்கப்படும் ரொட்டிகளுக்கும் பாஸ்தாவை போன்ற குணங்கள் உண்டு. அதனால் உணவில் சாண்ட்விச், ரொட்டி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.

ப்ளூ பெர்ரி

பெர்ரிப் பழங்களில் ஒன்றான ப்ளூ பெர்ரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. இது மன அழுத்தத்தை நீக்கி அமைதியை ஏற்படுத்தும்.

பாதாம்

தினமும் பாதாம் சாப்பிட்டு வந்தால், மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். ஏனெனில் இதில் ஜிங்க், வைட்டமின் பி12 அதிகம் உள்ளது. இது மனதை டென்சன் ஆகவிடாமல் பார்த்துக் கொள்ளும்.

க்ரீன் டீ

காலையில் க்ரீன் டீ குடித்து வந்தால், அதனால் கிடைக்கும் மன அமைதி வேறு எதிலும் கிடைக்காது.

மீன்

மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் வளமையாக உள்ளதால், அது மூளைக்கு செலினியம் மற்றும் ட்ரிப்டோபைனை அதிகரிக்கும். அதனால் மனது அமைதியாக இருக்கும்.

ஓட்ஸ்

உடலில் உள்ள செரோடோனின் அளவை ஓட்ஸ் அதிகரிக்க வைப்பதால், அது உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து, மனதை அமைதிப்படுத்தும்.

பால்

என்ன ஆச்சரியமா? ஆம், பாலில் ட்ரிப்டோபன் இருப்பதால் செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். அது மன அழுத்தத்தைக் குறைக்கும்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலியில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. அதன் அளவு குறைந்துவிட்டால் தான், சோர்வு ஏற்பட்டு மன அழுத்தம் அதிகரிக்கும்.

கிவி பழம்

ட்ரிப்டோபனை செரோடோனினாக மாற்றும் திறன் கிவி பழங்களுக்கு உள்ளது. அதனால் இந்த பழத்தை சாப்பிட்டு வர மன அழுத்தம் குறையும்.

வாழைப்பழங்கள்

வாழைப்பழங்கள் உடலில் வாயு தொல்லையை குறைத்து, நாள் முழுவதும் மனதை அழுத்தமின்றி வைத்துக் கொள்ள உதவும்.

அரிசி சாதம்

பொதுவாக கார்போஹைட்ரேட் சாந்தப்படுத்தும் குணத்தை உடையவை. அதனால் சாதத்தை தினமும் தவறாமல் சாப்பிடுங்கள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv