இலங்கை தமிழ் யுவதி கனேடிய இளம் அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அபிசேகா லொயிட்சன் என்ற யுவதியே இவ்வாறு இளம் கனேடிய அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஒன்டாரியோவில் நடைபெற்ற போட்டியில் குறித்த தமிழ் யுவதி அழகிப் பட்டம் வென்றுள்ளார்.

கர்நாடக சங்கீதம் உள்ளிட்ட பல்வேறு திறமைகளைக் கொண்டவராக அபிசேகா திகழ்கின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைப் பெற்றோருக்கு கனடாவில் பிறந்தவரே அபிசேகா எனத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் அமைந்துள்ள தமது தாயின் பாடசாலைக்கு கடந்த ஆண்டு சென்றதாகக் குறிப்பிடப்படுகிறது.

சந்தர்ப்பம் கிட்டினால் மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்;புவதாக அபிசேகா தெரிவித்துள்ளார்.

வவுனியாவின் பெற்றோருக்கு பிறந்த தமிழ் யுவதி கனடாவில் 2013-14 ஆம் வருடத்துக்கான வளர்;ந்து வரும் மிஸ் டீன் கனடாவாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்

ஒன்றாரியோ இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே அபிஸ்ஷேக்கா லோயட்சன் டீன் கனடாவாக தெரிவுசெய்யப்பட்டார்

சிறு வயதிலிருந்து அபிஸ்ஷேக்கா குரல் பயிற்சி மற்றும் வயலின் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார்

அத்துடன் நீச்சல் பயிற்சியாளராகவும் கூடைப்பந்தாட்ட வீராங்கனையாகவும் கரப்பந்தாட்ட வீராங்கனையாகவும் அவர் திகழ்கிறார்

கடந்த வருடம் வவுனியாவுக்கு சென்றிருந்த அவர் அவருடைய தாய் பயின்ற கற்குளம் தமிழ் கலவன் பாடசாலைக்கு சென்றார்
அங்கு அவர் மாணவர்களுக்கு விஞ்ஞானம் கணிதம் ஆங்கிலம் மற்றும் அடிப்படை கணணி ஆகியவற்றை கற்பித்து கொடுத்தார்

இந்தநிலையில் அந்த சந்தர்ப்பம் மீண்டும் கிடைத்தால் நிச்சயமாக மாணவர்களுக்கு கற்பிப்பேன் என்று அபிஸ்ஷேக்கா தெரிவித்துள்ளார்.0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv