சூரியன் இல்லாத புதிய கோள் கண்டுபிடிப்பு

பூமியில் இருந்து 80 ஒளி ஆண்டுகள் தொலைவில், சூரியன் போன்ற நட்சத்திரம் எதுமின்றி தன்னந்தனியே சுற்றி வரும் இளைய கோள் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

 அமெரிக்காவின் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி குழுவினர் நடத்திய ஆய்வில் இந்த இளைய கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, வியாழன் கோளை விட ஆறு மடங்கு பெரிதாக உள்ளது.

 சுமார் 1 கோடியே 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்தக் கோளுக்கு "பிஎஸ்ஓ ஜே318.5-22' என்று பெயரிடப்பட்டுள்ளது. 

 இதுவரையில் சூரியன் இல்லாமல் தனியாகச் சுற்றும் கோள் கண்டுபிடிக்கப்படவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv