மூளை சுத்தமாக நன்றாக தூங்குங்கள்! விஞ்ஞானிகள் தகவல்

அதிக நேரம் தூங்குவது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 அமெரிக்காவின் ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி மைகென் நெதர்கார்டு தலைமையிலான குழுவினர் மனிதர்கள் தூங்குவது ஏன்? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 

 அதில், நன்றாக தூங்கும் போது தான் மூளை சுத்தம் செய்யப்படுவது கண்டறியப்பட்டது. தூங்கும் போது பெருமூளையின் தண்டு வட திரவம் மூளையை சுற்றி பீச்சி அடிக்கப்படுகிறது. 

 அப்போது மூளைக்கு வெளிப்புறம் படிந்திருக்கும் மூலக்கூறுகளின் சிதைந்த பொருட்களும், நச்சு புரோன்டீன்களும் அப்புறப்படுத்தப்படுகின்றன. இதனால் உடல் நலத்திற்கு கெடுதல் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.

 இந்த ஆய்வுக்கு விஞ்ஞானி மைகென் நெதர்கார்டு குழுவினர் சுண்டெலிகளை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv