உடல் அழகை கெடுக்கும் புகைப்பழக்கம்

பொதுவாக புகைப்பிடிப்பவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே.


ஆனால், புகைப்பிடித்தல் நம் உடல் அழகை சிதைக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். உடல் தோற்றம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் புகைப்பிடிப்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும். இதற்கான 10 காரணங்கள் உங்கள் நலனுக்காக தொகுக்கப்பட்டுள்ளது.

உடலில் பாதிப்புக்கான அறிகுறிகள் தோன்றும் போது கெட்ட பழக்கங்களை விட்டு விடுவதற்கு நாம் முனைகிறோம். சிகரெட் பிடிப்பதால் முகத்தில் புடைப்பு அல்லது வீக்கம் போன்ற அறிகுறி தென்பட்டால் உடனடியாக புகைப்பிடிப்பதை நிறுத்திவிடுங்கள்.

ஏனெனில் புகைப்பிடித்தல் உடல் தோற்றத்தை சிதைக்கும் மிகப்பெரிய எதிரி.

தற்போது அதற்கான 10 காரணங்களை இங்கு காண்போம்

* புகைப்பிடிப்பதால் கண்ணைச் சுற்றி வீக்கம் அல்லது கருவளையம் உருவாகும், இதனால் முகம் எப்போது சோர்வாக தோன்றும். புகைப்பிடிப்பவர்கள் அதிகளவில் தூக்கத்தை இழப்பதற்கான (நான்கு மடங்கு அதிகமாக) வாய்ப்பு இருப்பதால், இளம் வயதிலே கண்ணைச் சுற்றி ‘ஐ பாக்ஸ்' அல்லது கரு வளையம் உருவாகிறது. இது முக சோர்வுக்கு வழிவகுக்கும்.

* புகையிலையிலுள்ள நிக்கோட்டின் என்ற நச்சுத்தன்மை, அசிங்கமான மஞ்சள் நிற பற்கள் தோன்றுவதற்கான முக்கிய காரணமாகும். ஆகவே பற்கள் தொடர்ந்து வெள்ளையாக இருக்க ஆசைப்பட்டால், புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்.

* பற்களில் மஞ்சள் நிறம் ஏற்பட்டால், அதை இலகுவாக நீக்கிவிட முடியாது. இதை நீக்க வேண்டுமெனில், டீத் க்ளினிங் அல்லது ஒயிட்டனிங் போன்ற செயல்பாடுகள் பல் மருத்துவர்கள் மூலம் செய்யப்பட வேண்டும். இல்லையெனில் கடைசி வரை மஞ்சள் நிற பற்களோடே இருக்க வேண்டும்.

* ஒருவர் தொடந்து புகைப்பிடிப்பதால், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான இரத்த ஓட்டம் தடைப்படும், இதனால், புகைப்பிடிக்காதவர்களை விட, புகைப்பிடிப்பவர்கள் 1.4 தடவை வயதானவர்களாக தோன்றுவார்கள்.

* நிக்கோட்டின் பற்களை மட்டுமல்ல, விரல்களிலும் மஞ்சள் நிற கறை ஏற்படுவதற்கு முக்கிய காரணியாகும். இந்த மஞ்சள் நிற கறையை, வீட்டு வைத்தியம் மூலம் நீக்க முடியும் என்றாலும், புகைப்பிடித்தலை நிறுத்துவது அதைவிட சிறந்தது.

* புகைப்பிடிப்பதிலிருந்து வெளியாகும் ஒருவகை கெமிக்கல், முடியின் டி.என்.ஏ-யில் பாதிப்பை ஏற்படுத்துவதால் பலவீனமான மற்றும் முடி உடைதல் போன்ற பிரச்சனைகள் உருவாகும். எனவே தான், தொடர்ந்து புகைப்பிடிக்கும் ஒருவருக்கு முடி உதிரும் பிரச்சனை அதிகமாக இருக்கும்.

* புகையிலையிலுள்ள நிக்கோட்டின், குழாய்ச் சுருக்கம் (வாசோகன்ஸ்ட்ரிக் ஷன்) என்ற நிலையை உருவாக்குவதால், இது குருதிக் குழாய்ச் சுருக்கத்திற்கு வழிவகுக்கிறது.

இதனால், ஆக்ஸிஜன் நிறைந்த குருதி முகத்திற்கு செல்வது குறைவதால், முகப்பொலிவு பாதிக்கப்படும். இதனால் முகத்தில் வடுக்கள் ஏற்பட்டு, இதை குணப்படுத்த நீண்ட நாள் தேவைப்படும்.

* புகையிலையிலுள்ள கார்பன் மோனாக்ஸைடு சருமத்தில் ஆக்ஸிஜனைக் குறைக்கிறது. நிக்கோட்டின் இரத்த ஒட்டத்தை தடை செய்கிறது. இவற்றால், வெளுத்த, பொலிவற்ற வறட்சியான முகத்தோற்றம் உருவாகும். இது ‘ஸ்மோக்கர்ஸ் ஃபேஸ்' என்றழைக்கப்படுகிறது.

* நிக்கோட்டின் சருமத்திசுக்களை பாதிப்பது மட்டுமன்றி, இது சருமத்தின் நெகிழ்வுத் தன்மையையும் குறைக்கிறது. உடல் எடை திடீரென கூடுதல் அல்லது குறைவதால், வெளுத்த கோடு போன்ற தழும்பு தோலில் ஏற்படுகிறது. சருமம் தானாக குணமடையும் தன்மையை நிக்கோட்டின் தடை செய்வதால் இந்த தழும்பு நீங்காது தொடர்ந்திருக்கும்.

* அதிகமாக புகைப்பிடிப்பதால் பற்கள் முழுமையாக பாதிப்படையும். இதில் பல் மஞ்சள் நிறமடைதல் ஒரு ஆரம்ப நிலையே. இதன் தொடர்ச்சியாக அனைத்து பற்களும் பாதிக்கப்பட்டு பற்கள் விழுவதற்காக வாய்ப்பு அதிகரிக்கும்.

* நம் எல்லோருக்கும் கண் பார்வை மிகவும் அவசியம். ஆகவே இது பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால், புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும். புகைப்பிடிப்பதால் இளம் வயதிலேயே கண்ணில் படலம் ஏற்படும் சாத்தியம் உருவாகி கண் பார்வையில் பாதிப்பு ஏற்படும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv