இதிலும் சிக்கனம் வேண்டும்!

பணவீக்கம் அதிகரித்து வரும் இன்றைய நிலையில், சிக்கனம் அதிகம் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் சிக்கனம் என்றால் சில விஷயங்களை நாம் கவனத்தில் கொள்வதில்லை. கீழ்க்கண்ட விஷயங்களை பின்பற்றிப் பாருங்கள்,நிறைய பணத்தைச் சேமிக்கலாம்..


* சமைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். ஆத்திர அவசரத்துக்கு ஓட்டலை நாட வேண்டியதில்லை. 

* வீட்டுத் தோட்டம் ஒன்றை அமைத்துப் பராமரியுங்கள். வீட்டுக்கான காய்கறிகள் கிடைக்கும். 

* வெளியில் உணவு உண்ணுவதை குறைத்துக் கொள்ளுங்கள். வேலைக்கு வீட்டிலிருந்து உணவு எடுத்துச் செல்லுங்கள். 

* சோடா மற்றும் குளிர்பானத்தைத் தவிர்த்து தண்ணீரை அருந்துங்கள். அது உடலுக்கும் நல்லது. 

* அருகாமையில் தோட்டம், பண்ணை இருந்தால் அங்கு சென்று பழங்கள், காளான் போன்றவற்றை வாங்குங்கள். அவை புத்தம் புதிதாகவும், விலை குறைவாகவும் இருக்கும். 

* மீன் பிடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அது நல்ல பொழுதுபோக்காகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். 

* நொறுக்குத் தீனி, துரித உணவுகளைக் குறையுங்கள். 

* மதுபானங்களைத் தவிருங்கள். 


* சுற்றுலா செல்வதானால் உணவையும், தண்ணீரையும் நீங்களே எடுத்துச் செல்லுங்கள். 

* தேவைக்கு அதிகமாகச் சமைக்காதீர்கள். உணவை வீணாக்காதீர்கள், கொட்டாதீர்கள். 

* சத்துள்ள, தரமான உணவாக வாங்குங்கள். 

* பாட்டில் தண்ணீரை தவிர்க்கலாம். தேவைப்பட்டால் தண்ணீரைச் சுடவைத்து அல்லது வடிகட்டிக் குடியுங்கள். 

* அந்தந்த சீசனில் கிடைக்கும் உணவுப்பொருட்களை வாங்குங்கள். அவை விலை மலிவாக இருக்கும். 

* உள்ளூர் உணவுகளை வாங்குங்கள். முடிந்தால் மொத்த காய்கறிச் சந்தைக்குச் சென்று வாங்குங்கள். 

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv