பலத்த சவால்களுக்கு மத்தியில் வடக்கில் வெற்றிக் கொடி நாட்டியது தமிழ் தேசிய கூட்டமைப்பு

வட மாகாண சபைத்தேர்தலில்  தமிழ் தேசிய கூட்டமைப்பு  30 ஆசனங்களை ( போனஸ் 2 அடங்கலாக)  கைப்பற்றி அமோக வெற்றியடைந்துள்ளது.

இதுதவிர ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களையும், ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

யாழ் மாவட்டத்தில் 213,907 வாக்குகளை மொத்தமாக பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு  14 ஆசனங்களைக் கைப்பற்றியது.

இங்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் 2 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தல் சர்வதேசத்தின் கவனத்தினை முற்றாக ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இது தவிர வட மாகாணத்தின் மற்றைய மாவட்டங்களில் கட்சிகள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை வருமாறு,

மன்னார் :
 தமிழ் தேசிய கூட்டமைப்பு  - 3
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1

கிளிநொச்சி :
தமிழ் தேசிய கூட்டமைப்பு - 3
ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1

முல்லைத்தீவு :
 தமிழ் தேசிய கூட்டமைப்பு  - 4
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1

வவுனியா :
 தமிழ் தேசிய கூட்டமைப்பு - 4
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 2

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv