சிக்கன் மஞ்சூரியன் !!!

தேவை ?

இஞ்சி - 1 1/2 கப் (வெட்டப்பட்டது)
பூண்டு - 1 1/2 கப் (வெட்டப்பட்டது)
பச்சை மிளகாய் - 2-4 (குறுக்காக வெட்டப்பட்டது)
மிளகாய் சாஸ் - 3 கப்
சோயா சாஸ்- 1 1/2 தேக்கரண்டி
வினிகர் - 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி
மிளகு - 1/4 தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
சோள மாவு - 1 1/2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
கொத்தமல்லி -இலை தேவையான அளவு

ஊற வைக்கவும்...

எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம்(துண்டுகளாக வெட்டப்பட்டது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
வினிகர் அல்லது எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
முட்டையின் வெள்ளை - 1
சோள மாவு - 1 1/2 தேக்கரண்டி
மைதா மாவு- 2 தேக்கரண்டி

செய்யும் முறை;

முதலில் எலும்புகளை நீக்கிவிட்டு சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். முட்டையை கலக்கி அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் சாஸ், உப்பு,சோள மாவு, மைதா மாவு அனைத்தையும் சேர்த்து மீண்டும் நன்கு கலக்கி, துண்டுகளாக வைத்துள்ள சிக்கனை அதில் புரட்டி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.

பிறகு அவற்றை பொன்னிறமாக மெதுவான தீயில் பொரித்து எடுக்கவும். பூண்டு, குடைமிளகாய், வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும். விருப்பத்திற்கேற்ப வெங்காயத்தாளையோ அல்லது மல்லிக்கீரையையோ பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய்விட்டு நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு 2 அல்லது 3 நிமிடம் வதக்கி, அத்துடன் மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ், அனைத்தையும் போட்டு கிளறவும்.

சோளமாவில் சிறிது தண்ணீர்வீட்டு கரைத்துக்கொண்டு கிரேவியுடன் ஊற்றி, உப்பு சேர்த்து, பொரித்து வைத்துள்ள கோழிகறியையும் பொடிதாக நறுக்கிய வெங்காயத்தாள் அல்லது மல்லிக்கீரையை அதில் போட்டு 2 அல்லது 3 நிமிடம் மூடிபோட்டு லேசான தீயில் வைக்கவும். பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து புரட்டிவிட்டு இறக்கவும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv