சிங்கப்பூரில் சமூக போராளி விருது வாங்கிய தமிழர்

சிங்கப்பூரில் அறப்பணிகள் செய்யும் தமிழருக்கு அந்நாட்டின் சார்பில் சமூக போராளி விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைநகர் சென்னையில் பிறந்தவர். 50 ஆண்டுகளுக்கு முன், பிழைப்புக்காக சிங்கப்பூர் சென்ற ஜலீல், கார் துடைப்பது போன்ற வேலைகளை செய்து படிப்படியாக உயர்ந்து கட்டுமான பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

 ஆண்டுக்கு 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் ஈட்டும் நிறுவனத்தை நடத்திவரும் ஜலீல் ஏழைகளுக்கு கல்வி தொகை உள்ளிட்டவற்றை வழங்கி சேவை செய்து வருகிறார். 

 இந்தியாவை சேர்ந்த நபர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வரும் ஜலீலின் சேவையை பாராட்டி சிங்கப்பூர் அரசு “சமூக போராளி விருது” வழங்கியுள்ளது.

 இந்த விருதுடன், 6 லட்ச ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்பட்டுள்ளது.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv