செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்! தகவல் அனுப்பியது கியூரியாசிட்டி

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள மண்ணில் தண்ணீர் இருப்பதாக நாசாவின் ரோவர் விண்கலம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிலையம் கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஆய்வுப் பணிக்காக ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது. 

 அதன் மூலம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் முதல் ஆய்வு தற்பொழுது நடைபெற்றுள்ளது. அதில், செவ்வாய் கிரகத்தில் உள்ள மண்ணில் தண்ணீர் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள மண்ணில் 2 சதவிகிதம் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 


 மேலும் இந்த மண்ணில் கார்பன் டை ஆக்ஸைடு, ஆக்ஸிஜன் மற்றும் சல்பர் மூலக்கூறுகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான கண்டுபிடிப்பில் நல்ல முன்னேற்றத்தைத் தந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv