தாவரங்களில் இருந்து சைவ முட்டை உற்பத்தி: விஞ்ஞானிகள் சாதனை

முட்டை சைவமா? அசைவமா? என்ற சர்ச்சை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தாவரங்களில் இருந்து சைவ முட்டைகளை உணவு விஞ்ஞானிகள் உற்பத்தி செய்துள்ளனர். அவற்றை அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் உணவு விஞ்ஞானிகள் சிறப்பு வாய்ந்த ஒரு வகை பட்டானியின் 11 வகை தாவரங்களில் இருந்து உருவாக்கியுள்ளனர்.

 இந்த தகவலை சைவ முட்டை தயாரிக்கும் கம்பெனியின் தலைமை அதிகாரி ஜோஷ் டெட்ரிக் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும் போது, இம்முட்டை சைவ பிரியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் சாப்பிடலாம் என்றார் இதற்கிடையே இந்த சைவமுட்டை உற்பத்தியால் கோழி முட்டைகளின் விற்பனை பாதிக்காது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv