கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற உலகின் சிறிய கார்

உலகின் மிகச் சிறிய காரை வடிவமைத்துள்ள அமெரிக்கர், அதை சாலையில் ஓட்டிச் சென்று, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் தன் படைப்பை இடம் பெறச் செய்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த, ஆஸ்டின் கால்சன், கார் வடிவமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். 

 வித்தியாசமான பல கார்களை வடிவமைத்துள்ள இவர், ஏதேனும் புதுமை படைக்க வேண்டும் என்ற ஆவலில், சிறிய ரக காரை வடிவமைத்துள்ளார். இதன் பலனாக, 25 அங்குல உயரமும், நான்கு அடி நீளமும் உடைய சிறிய ரக காரை வடிவமைத்துள்ளார். மிகச் சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரை சாலையில் ஓட்டுவதற்கு சில முக்கிய அம்சங்கள் தேவைப்பட்டன. இதன்படி, பாதுகாப்பு கண்ணாடி, ஒலிப்பான், மற்றும் சீட் பெல்ட் போன்றவை சேர்க்கப்பட்டன. 

அதன் பின், சாலை போக்குவரத்து வாகன விதிகளின் படி, அனைத்து அம்சங்களும் பூர்த்தி செய்யப்பட்டு, தடையில்லா சான்றிதழையும் பெற்றார். அரசாங்க ஒப்புதலுடன், தான் வடிவமைத்துள்ள காரை, சாலையில் ஓட்டிக் காண்பித்த, கால்சன், தன் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில், உலகின் மிகச் சிறிய கார் என்ற பெருமையையும் இந்த கார் பெற்றுள்ளது.0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv