முதன் முறையாக 2.5 D புதிய அனிமேஷன் தொழிநுட்பத்தில் கண்ணப்ப நாயனார் வரலாறு (Video, Photos)

தெய்வப் பெருந்தகை சேக்கிழார் பெருமான் இயற்றிய பெரிய புராணத்தில் வரும் கண்ணப்ப நாயனாரின் புதுமையான வரலாறு முதன் முறையாக 2.5 D புதிய அனிமேஷன் உயிரூட்டு தொழிநுட்பத்தில் DVD ஆக வெளிவந்துள்ளது.

 சேக்கிழாரின் தெய்வீக வரிகளைக் கொண்டு ஏழு பாடல்களால் உருவாக்கப்பட்ட இந்த அனிமேஷன் குறும்படமானது சுமார் 30 நிமிடங்களைக் கொண்டு அமைந்திருக்கின்றது. சென்னைப் பல்கலையின் கீழ் இயங்கும் ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அனிமேஷன் துறை பேராசிரியரான திரு. ராம்குமாரினால் சமூக சேவை நோக்கில் இந்த அனிமேஷன் DVD உருவாக்கப்பட்டுள்ளது.


 பேராசிரியர் உயர்திரு. ராம்குமார் அவர்கள் சிவசின்னங்களில் ஒன்றான திருநீறை எப்போதும் தன் மேனியில் தரித்து இந்துசமய விழுமியங்களின் பால் தன் எண்ணங்களைச் செலுத்தி வாக்கும் வாழ்வும் ஒன்றென வாழ்ந்து வருபவர்.

 இந்து சமயத்தின் தொன்மையை, நாயன்மார்களின் தெய்வீக அற்புதங்களை நமது இளைய தலைமுறையும் அறிந்து கொள்ள வேண்டும் என்கின்ற நல்ல நோக்கில் மிகுந்த சிரத்தை எடுத்து இதனை உருவாக்கியுள்ளார்.

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv