36 ஆண்டுகளுக்கு பிறகு சூரிய மண்டலத்தை கடந்த வாயேஜர்–1

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கிரகங்களை கண்டறிய ‘வாயேஜர்–1’ என்ற விண்கலத்தை வடிவமைத்தது.

 இது கடந்த 1977–ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. அன்று முதல் அது விண்ணில் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் அது பூமியில் இருந்து புறப்பட்ட 36 வருடங்களுக்கு பிறகு சூரிய மண்டலத்துக்குள் நுழைந்து கடந்து சென்றுள்ளது.

 விண்வெளி வரலாற்றில் மனிதனால் தயாரித்த ஒரு பொருள் சூரிய மண்டலத்துக்குள் புகுந்து பயணம் செய்து கடந்தது இதுவே முதல் முறையாகும். இது ஒரு மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது. 

 வாயேஜர் விண்கலம் கடும் வெப்பம், மற்றும் குளிர் உள்ளிட்ட தட்ப வெப்ப நிலைகளை தாங்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv